Saturday, April 13, 2013

தமிழின் அருமை பெருமை - சாத்தூர் சேகரன்

உலகில் 2700 மொழிகள் உள்ளன. இந்த எண்ணிக்கை 1000 பேருக்கு மேல் பேசுபவர்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டது. மாறாக 50 பேர் 100 பேர் பேசும் மொழிகளைக் கணக்கிலெடுத்தால் உலக மொழிகள் எண்ணிக்கை 6000-க்கு மேலாக இருக்கும் இவை சரியான ஆய்வா ? இல்லையில்லை. உலகில் இருப்பது எல்லாம் தமிழ் மொழியும் திரிந்த தமிழுமாகி பேச்சுத் தமிழ் மொழியுமே ஆகும். இரு மொழிகள் மட்டுமே உலகில் உள்ளன.

01. ஆங்கிலம், ஜெர்மன். இலத்தீன், கிரேக்கம், இந்தி போன்ற அத்தனை  உலக மொழிகளும் திரிந்த தமிழின் வழி வந்த மொழிகள் என்று கூறலாம். இந்த அருமையான பெருமை தமிழ் என்ற ஒரு மொழிக்கு மட்டுமே உள்ளது.

02. உலகில் தமிழுக்கு மட்டுமே மிகக் குறந்த எழுத்துக்கள் உண்டு. உயிர் 12, மெய் 18 ஆக 30 எழுத்துக்கள். ஆங்கிலம் போன்ற சில மொழிகளுக்கு 26 எழுத்துக்கள்தானே என்று வாதாடலாம். ஆனால் ஆங்கில எழுத்து 4 வகை உண்டு. பெரிய எழுத்து : A, B, C, D  என 26 எழுத்துக்கள். கையெழுத்து a, b, c, d .... என 26 எழுத்துக்கள், இன்னும் வீச்செழுத்து, அலங்கார எழுத்து என்பன எல்லாம் கூடி 104 எழுத்துக்கள் ஆகும்.

03. தமிழின் வயது 1,00,000 ஆண்டுகள் ஆகும். செம்மையான மொழியாக மாறி 60,000 ஆண்டுகள் ஆகும். சித்திர எழுத்து மொழியாகி 12,000 ஆண்டுகள் ஆகிறது. கோட்டு எழுத்தாகி 6000 ஆண்டுகள் ஆகிறது..

04. சித்திர எழுத்துக் காலத்தில் நல்ல இலக்கியம் உண்டாயிற்று. முதற் சங்கம் கி.மு.8800 ஆண்டுகள் மேல் எல்லையாகவும் 4000 ஆண்டுகள் கீழ் எல்லையாகவும்  இருந்தது.இரண்டாம் சங்கம் 4000 ஆண்டுகள் மேல் எல்லையாகவும் 1800 ஆண்டுகள் கீழ் எல்லையாகவும் இருந்தது..  மூன்றாம் சங்கம் கி.மு. 1800 ஆண்டுகள் மேல் எல்லையாகவும் கி.பி. 300 கீழ் எல்லையாக இருந்தது. உலகில் சங்கம் வைத்து மொழி வளர்த்தது. 10,000 ஆண்டுகளாக வளர்ந்தது தமிழ் மொழி மட்டுமே ஆகும்.

05.பல நூறு புலவர்கள் பாடிப் பரவி வளர்த்த மொழி தமிழ் மொழி மட்டுமே ஆகும். பெண்டிற் புலவர்கள் அதி அற்புதமாகத் தமிழ் மொழி வளர்த்தனர்.உலகில் இத்தனை பெண்பாற் புலவர்கள் எந்த மொழியிலும் இல்லை.

06. தமிழ் மொழியில் மட்டுமே -  இன்ன எழுத்தில்தான் சொல் தொடங்க வேண்டும், இன்ன எழுத்தில்தான் சொல் முடிய வேண்டும் என்ற கட்டுப்பாடு உண்டு. இதனால்தான் தமிழில் மட்டுமே ஒலி அமைதி தூக்க முடிந்தது. கடித ஒலிப்புள்ள ஒரு சொல் கூட தமிழில் இல்லை.

07. இனிமையும் நீர்மையும் தமிழ் எவலாகும்.- என்ற கருத்துப்படி  கன்னித் தமிழாக என்றும் இளமையுடன் கன்னித்தனிழ் என்ற நிலையில் உள்ள மொழி தமிழ் மொழி மட்டுமே ஆகும்.

08. சொற்களிலேயே இலக்கிய நயமுடைய ஒரே மொழி, தமிழ்மொழி மட்டுமே ஆகும். ஆதி காலத்தில் -கற்கால காலத்தில் ஆதிமனிதன் ஒரு கருவியைச் செய்தான். அதற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று சிந்தித்தான். அவனது மனைவி மடியில் அவன் குழந்தை படுத்துக் கிடந்தது. அங்குமிங்கும் அது மடியில் உருண்டு கொண்டிருந்தது. ஆதிமனிதன் தன் கருவிக்கு “அம்மா குழவி“ என்றான். அதுவே அம்மிக்  குழவி என்று பெயர் ஆயிற்று. இப்படி அருமையான 1000 சொற்களுக்கு மேல் இலக்கிய நயனுள்ளதாக உள்ளன.

09. தொல்காப்பியம் போன்ற ஒப்பற்ற இலக்கண நூல் உலகில் எந்த மொழியிலும் இல்லை.

10. சிலப்பதிகாரம் போன்ற வரலாற்றுக் காப்பியம் எந்த மொழியிலும் இல்ல.

11. கம்பராமாயணம் மாதிரி இலக்கியப் பெட்டகம் எந்த மொழியிலும் இல்லை.

12.சங்க இலக்கியங்கள் போன்று மிகப் பெரிய இலக்கியக் கட்டமைப்பு வேறு எந்த மொழியிலும் இல்லை.

13. மணிமேகலை போன்ற தத்துவம் கூறும் எளிய நூல் உலகில் எதுவுமெ இல்லை.

இப்படி இன்னும் பலவும் கூறவும் முடியும்.

நன்றி :- இலக்கிய முரசு, நாளிதழ், நாகர்கோயில், 629 001

                  9442008200                               ilakkiyamurasu@gmail.com

0 comments:

Post a Comment

Kindly post a comment.