Tuesday, April 2, 2013

கு.சின்னப்பபாரதி இலக்கிய அறக்கட்டளை விருதுக்கு படைப்புகள் வரவேற்பு !

கு.சின்னப்பபாரதி இலக்கிய அறக்கட்டளை விருதுக்கு இந்தியா, வெளிநாடுகளில் வாழும் தமிழ் இலக்கியப்

கு.சின்னப்பபாரதி இலக்கிய அறக்கட்டளை விருதுக்கு இந்தியா, வெளிநாடுகளில் வாழும் தமிழ் இலக்கியப் படைப்பாளிகள் தங்களது படைப்புகளை அனுப்பி வைக்கலாம்.


 கு.சின்னப்பபாரதி & கி.இராஜநாராயணன்

இதுகுறித்து கு.சின்னப்பபாரதி அறக்கட்டளையின் தலைவர் பொ.செல்வராஜ், செயலர் கா.பழனிச்சாமி ஆகியோர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

 நாமக்கல்லைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கு.சின்னப்பபாரதி இலக்கிய அறக்கட்டளை சார்பில், ஆண்டுதோறும் அக்டோபர் 2-இல் சிறந்த எழுத்தாளர்களுக்கு முதன்மை விருதுடன் ரூ.1.50 லட்சம் ரொக்கப் பரிசும், சிறந்த நூல்களுக்கான இலக்கிய விருதுகளாக தலா ரூ.10 ஆயிரம், கேடயம்,  சான்றிதழ்களும் வழங்கப்பட்டு வருகின்றன.

நாவல், கட்டுரை (இலக்கிய ஆய்வு உள்பட), சிறுகதை மொழி பெயர்ப்பு, கணினித் தமிழ் இலக்கியம், சமூக சேவை, கவிதை, சிறந்த பத்திரிகையாளர் ஆகிய பிரிவுகளுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. இதில், ஏதேனும் ஒரு பிரிவில் நூலின் தரத்தின் அடிப்படையில் முதன்மை விருதும், பிற பிரிவுகளில் வரப் பெற்ற இலக்கியங்களுக்கு சிறப்பு விருதுகளும் வழங்கப்படுகின்றன.

இந்த அறக்கட்டளையின் 5ஆம் ஆண்டு இலக்கிய விருதுகள், பரிசுகளுக்கு இந்தியா மட்டுமன்றி, வெளிநாடுகளில் வாழும் தமிழ் இலக்கியப் படைப்பாளிகளும் படைப்புகளை அனுப்பி வைக்கலாம். படைப்புகளின் முதல் பதிப்பு 2008, ஜனவரி 1 முதல் 2012, டிசம்பர் 31ஆம் தேதிக்குள் வெளிவந்ததாக இருக்க வேண்டும்.  படைப்புகளின் இரு பிரதிகளுடன் நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பத்தை ,

அரங்கசாமி, 6-175 கே.ஜி.போஸ் அஞ்சல் நகர், போதுப்பட்டி அஞ்சல், நல்லிப்பாளையம் (வழி), நாமக்கல், தமிழ்நாடு -637 003

என்ற முகவரிக்கு மே 31ஆம் தேதிக்குள் வந்து சேரும்படி அனுப்பி வைக்க வேண்டும். தாமதமாக வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது.

விண்ணப்பப் படிவத்தை www.kucbatrust.com என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். எழுத்தாளர், பதிப்பாளர் அல்லது அவர்களின் சார்பில், யாரும் விண்ணப்பத்தையும், நூல்களையும் அனுப்பலாம். விருதுக்காக அனுப்பி வைக்கப்படும் நூல்கள் எக்காரணத்தைக் கொண்டும் திருப்பி அனுப்பப்படமாட்டாது. படைப்புகளைத் தேர்வு செய்வது தொடர்பான இறுதி முடிவு அறக்கட்டளையைச் சார்ந்தது என அந்தச் செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.                                                       

நன்றி :- தினமணி, 02-04-2013                          


0 comments:

Post a Comment

Kindly post a comment.