Saturday, March 9, 2013

குமரி மாவட்ட இளம் படைப்பாளி இ.மலர்வதிக்கு சாகித்ய அகாதெமி விருது !


கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இ.மலர்வதி எழுதிய தூப்புக்காரி என்கிற நாவல் இளம் படைப்பாளிக்கான சாகித்ய அகாதெமி விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

அசாம் மாநிலம் குவாஹாட்டியில் இம் மாதம் 22ஆம் தேதி நடைபெறும் விழாவில் விருது வழங்கப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்டம், வெள்ளிக்கோடு அருகே கிழக்குவிளையைச் சேர்ந்த இலியாஸ் மகள் மலர்வதி. இவரது, தூப்புக்காரி என்ற நாவல் சாகித்ய அகாதெமி விருதுக்குத் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மலர்வதி கூறியதாவது:

2008-ல் காத்திருந்த கருப்பாயி என்ற நாவல் நூல் வெளியானது. 4 ஆண்டுகளுக்குப் பிறகு தூப்புக்காரி என்ற நாவல் நூல் 2012 பிப்ரவரியில் வெளியானது. சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் பொன்னீலன் எனக்கு வழிகாட்டியாக இருந்து செயல்பட்டார். விருதுக்கு அறிவிக்கப்பட்டதும் பெரும் மகிழ்ச்சி அடைந்தேன்.

இதுவரை சமயம் சார்ந்த 3 நூல்களும், 2 நாவல்களும் எழுதி உள்ளேன்.

தூப்புக்காரி நாவல், துப்புரவுத் தொழிலாளர் வாழ்க்கையின் யதார்த்த நிலையை, அவர்களின் வட்டாரப் பேச்சு வழக்குடன் சித்தரித்ததாகும். இந்த விருது மேலும் பல நாவல்களை எழுத எனக்குத் தூண்டுகோலாக அமைந்துள்ளது என்றார் மலர்வதி.             

நன்றி :- தினமணி, 09-03-2013 


0 comments:

Post a Comment

Kindly post a comment.