Saturday, March 9, 2013

பிரபல நிறுவனங்களின் பெயரில் போலி பொருள்கள்: 3 ஆண்டில் 117 பேர் கைது !

பிரபல நிறுவனங்களின் பெயரில் போலியான பொருள்களை விற்றதாகக் கடந்த 3 ஆண்டுகளில் 117 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து ரூ.1.84 கோடி மதிப்புள்ள பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து தமிழக காவல்துறையின் குற்றப்பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பொதுமக்கள் தினமும் பயன்படுத்தும் பொருள்கள், போலியான பொருள்களாகத் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வருகின்றன.

இப்படிப்பட்ட போலியான பொருள்களை விற்பனை செய்யும் நபர்கள் மீது காப்புரிமைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதில் கடந்த 3 ஆண்டுகளில் 131 வழக்குகள் தொடரப்பட்டு, 117 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து ரூ.1 கோடி 84 லட்சம் மதிப்பிலான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அதேவேளையில், பொதுமக்கள் இப்படிப்பட்ட போலிப் பொருள்களை வாங்காமல் இருப்பதற்கு விழிப்புடன் இருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட கடைகளில் மட்டும் பொருள்களை வாங்க வேண்டும்.

ஒரு நிறுவனத்தின் பொருள் வாங்குவதற்கு முன்பு அந்த நிறுவனம் கூறும் அறிவுரைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

போலிப் பொருள்களைப் பற்றிய தகவல் தெரிந்தால், 

குற்றப்பிரிவு, 

தமிழகக் காவல்துறை, 

293, எம்.கே.என். சாலை, 

ஆலந்தூர், 

சென்னை-600 016 

என்ற முகவரிக்குத் தகவல் தெரிவிக்கலாம்.         

நன்றி :- தினமணி, 09-03-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.