Saturday, March 23, 2013

ஒரு கிலோ எடை கொண்ட அரிய வகை பச்சை மரகத கல் !

மேற்கு ரஷ்யாவின் உரல்ஸ் மலைப்பகுதியில் விலை மதிப்புமிக்க மரகதக் கற்கள் தோண்டி எடுக்கப்படுகின்றன.

கடந்த ஆண்டு இப்பகுதியில் 3 ஆயிரத்து 187 கேரட் மதிப்புள்ள மரகதக் கல் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கற்களைப் பட்டை தீட்டும் நிறுவனத்தில் கடந்த ஆண்டு 50 கிலோ மரகதக் கற்கள் ஏலம் விடப்பட்டன. இதில் 10 லட்சம் அமெரிக்க டாலர்கள் அரசுக்கு கிடைத்தது.

இந்நிலையில் 5 ஆயிரம் கேரட் தரம் கொண்ட சுமார் ஒரு கிலோ எடையுள்ள அரிய வகை உயர்ரக பச்சை மரகதக் கல் ஒன்று இப்பகுதியில் மீண்டும் கிடைத்துள்ளது. இதன் விலையை மதிப்பிடும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.                                                                                                           

நன்றி :- மாலை மலர், 23-03-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.