Tuesday, March 12, 2013

அம்பத்தூர் சிரிப்பரங்கத்தில் அசோகமித்திரன் -தமிழ்த்தேனீ






தமிழ்த்தேனீ via googlegroups.com 


to mintamil
1003/2013  அன்று  அம்பத்தூர்  திரு சிரிப்பானந்தா என்கிற சம்பத் அவர்களால் நடத்தப்பெற்ற சிரிப்பரங்கத்தில் நடந்த சிரிப்பரங்க விழாவில்  எழுத்தாளர் உயர் திரு அசோகமித்ரன் அவர்கள் வந்திருந்தார்.

இயல்பாகவே மிக எளிமையான முறையில்  நகைச்சுவையாகப் பேசினார்.
நகைச்சுவை என்பது  திணிக்கப்படுவதல்ல, இயல்பாக உள்ளிருந்தே ஊற்று போல் தானாக வெளிவருவதும் ,கேட்போர் உள்ளத்திலும் நகைச்சுவை உணர்வைத் தூண்டும் அளவுக்கு இயல்பாக இருக்க வேண்டும்
என்னும் கருத்தை மிக எளிமையாக நகைச்சுவையாக உணர்த்தினார்

மூத்த எழுத்தாளரும்  பல பட்டங்களையும் விருதுகளையும் பெற்ற 
அவரைச் சந்தித்து அவரிடம் ஆசி பெற்றேன்.

திரு அசோகமித்ரன் அவர்களைப் பற்றிய சிறு  குறிப்பு:-

1931ம் ஆண்டு  ஆந்திரப் ப்ரதேசத்தில் உள்ள செகந்திராபாத் என்னும் நகரத்தில் பிறந்த இவர் 

21ம் வயதில் சென்னையில் குடியேறினார்.எளிமையும் , மெல்லிய நகைச்சுவையும் கொண்ட இவரது படைப்புகள்  தமிழ் இலக்கியத்துக்கு உலக அளவில் அங்கீகாரம் பெற்றுத் தந்தவை.

இவரது நாவல்கள்  ஆங்கிலம் , இந்தி, உள்ளிட்ட பலவேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

திரு அசோகமித்ரன் அவர்கள் அயோவா பல்கலைக் கழகத்தில் எழுத்தாளர்களுக்கானசிறப்புப் பயிலரங்கத்தில் கலந்து கொண்டவர் .

1996ம் ஆண்டு  இவர் படைத்த   " அப்பாவின் ஸ்னேகிதர் " சிறு கதைதொகுப்புக்காக சாஹித்ய அகடமி விருது பெற்றவர்.

இவரது சிறுகதைகள்:-

வாழ்விலே ஒரு முறை
விமோசனம்  விடுதலை
காலமும் ஐந்து குழந்தைகளும்
முறைப்பெண்
அப்பாவின் ஸ்னேகிதர்
பிப்லப் சௌத்ரியின் கடன் மனு
 போன்றவை மிகப் ப்ரசித்தம்
நாவல்கள்:-
பதினெட்டாவது அட்சக் கோடு, 
தண்ணீர், 
இன்று
ஆகாசத் தாமரை
மானசரோவர்
கரைந்த நிழல்கள்
குறு நாவல்கள்:-
இருவர்
விடுதலை
தீபம்
விழா மாலைப் பொழுதில்

போன்றவை மிகப் ப்ரபலமானவை
 
பராசக்தி தமிழ்த் திரைப்படம்  ஒரு மைல்கல்  என்பதில் சந்தேகமில்லை,
ஆனால் அதுவே சினிமாவுக்குரிய  சிந்தனைப் போக்கை தமிழ் சினிமா உலகில் வெகுதூரம் பின்  தள்ளிவிட்டது , புணர்ச்சிக்குப் பிறகு  ஆணைக் கொன்றுதின்றுவிட்டு முட்டையிட்ட பிறகு தானும் மடிந்துவிடும் ஒரு கொடூர வகைப் பூச்சிபோல பராசக்தி திரைப்படம் சினிமாவையும் பின் தள்ளிவிட்டு தமிழ் மேடை நாடகத்தையும் குற்றுயிரும் குலையுயிருமாக செய்து விட்டது என்று இவர் மிகவும் தைரியமாக விமர்சனம் எழுதியவர்.

திரைஉலகை மையமாக வைத்து எத்தனையோ நாவல்கள் வெளிவந்துவிட்ட
 போதிலும் இன்று வரை தமிழில் எழுதப்பட்ட மகத்தான கலைப் படைப்புகளாகத் திகழ்பவை திரு அசோக மித்ரன் அவர்களின்

  " கரைந்த நிழல்களும்"

"மானசரோவரும்" தான்.

சினிமா என்னும் வண்ணக் கனவின் பின் புலத்தில் கவிந்திருக்கும்
ஆழமான இருளுக்குள் ஒரு மெழுகு வர்த்தி துணை கூட இல்லாமல்
 பயணம் செய்கிறார்  திரு அசோகமித்ரன்.
அரிதாரம் இவருக்கு ஒரு பொருட்டில்லை, அந்தராத்மாக்களை அடையாளம்
காண்பதே  இவரது நோக்கம்," சினிமாவானால் என்ன, வெறெந்தத் துறையானால் என்ன?
உலகம் உயிர்த்திருக்கக் காரணமாக இருப்பது மனித மனமும் அன்பும் நம்பிக்கையும்,நம்பிக்கைத் த்ரோகங்களும், தீராத விசித்திரச் சுபாவங்களும்தானே " என்பது இவர் கருத்துஎன்று கிழக்கு பதிப்பகத்தில் இவரைப் பற்றி எழுதியுள்ளார்கள்

நன்றி விக்கிபீடியா

விழாவுக்கு   முகநூலில் ப்ரபலமான  சகோதரி  திருமதி லதா சரவணன் அவர்களும் வந்திருந்து உரையாற்றினார்
10 attachments — Download all attachments (zipped for )   View all images   Share all images  
WP_000725.jpgWP_000725.jpg
105K   View   Share   Download  
WP_000729.jpgWP_000729.jpg
96K   View   Share   Download  
WP_000731.jpgWP_000731.jpg
94K   View   Share   Download  
WP_000732.jpgWP_000732.jpg
98K   View   Share   Download  
அசோக மித்ரன் உரையாற்றுகிறார்.jpgஅசோக மித்ரன் உரையாற்றுகிறார்.jpg
94K   View   Share   Download  
அசோகமித்ரன் அவர்கள் உரையாற்றுதல்.jpgஅசோகமித்ரன் அவர்கள் உரையாற்றுதல்.jpg
97K   View   Share   Download  
திரு அசோக மித்ரன் அவர்களும் திரு சிரிப்பானந்தா அவர்களும்.jpgதிரு அசோக மித்ரன் அவர்களும் திரு சிரிப்பானந்தா அவர்களும்.jpg
87K   View   Share   Download  
திரு அசோகமித்ரன் அவர்களும்  திரு சிரிப்பானந்தா.jpgதிரு அசோகமித்ரன் அவர்களும் திரு சிரிப்பானந்தா.jpg
101K   View   Share   Download  
திரு அசோகமித்ரனும் தமிழ்த்தேனியும்.jpgதிரு அசோகமித்ரனும் தமிழ்த்தேனியும்.jpg
98K   View   Share   Download  
திருமதி லதா சரவணன்.jpgதிருமதி லதா சரவணன்.jpg
102K   View   Share   Download  
அன்புடன்
தமிழ்த்தேனீ

0 comments:

Post a Comment

Kindly post a comment.