Wednesday, March 13, 2013

சென்னையில் மினி பஸ் மே மாதம் இயங்கும் !


மினி பஸ் சேசிஸ் தயாரிப்பதற்கான தனியார் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு, கொள்முதல் உத்தரவும் அந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்டு விட்டதாக மாநகரப் போக்குவரத்துக்கழக உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதன் காரணமாக மே மாதத்தில் சென்னையில் மினி பஸ்கள் இயங்கும் என்றும் அவர்கள் கூறினர்.

மாநகர பஸ்கள் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் மக்களை, பஸ் நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களுடன் இணைக்கும் வகையில் சென்னையில் மினி பஸ்கள் இயக்கும் திட்டத்தைத் தமிழக அரசு அறிவித்தது.

முதல்கட்டமாக 100 மினி பஸ்களும், பின்னர் தேவைக்கேற்ப இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்படவும் உள்ளன.

இந்தப் பஸ்களுக்கான சேசிஸ் தனியார் நிறுவனங்கள் மூலம் தயாரிக்கப்பட உள்ளன. டெண்டர் மூலம் தனியார் நிறுவனத்தைத் தேர்வு செய்யும் பணியை சாலை போக்குவரத்து நிறுவனம் (ஐஆர்டி) மேற்கொண்டு, கடந்த வாரம் இறுதி செய்யப்பட்ட பட்டியலை அரசிடம் சமர்ப்பித்தது.

இதில் குறைந்த ஒப்பந்தப் புள்ளி சமர்ப்பித்த குறிப்பிட்ட நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு, கொள்முதல் உத்தரவும் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகரப் போக்குவரத்துக் கழக உயர் அதிகாரி ஒருவர் கூறியது:

மினி பஸ் சேசிஸ் தயாரிப்பதற்கு "லேலெண்ட், "டாடா மோட்டார்ஸ்' ஆகிய இரண்டு நிறுவனங்கள் ஒப்பந்தப் புள்ளிகளைச் சமர்ப்பித்திருந்தன. கடந்த 10 நாள்களுக்கு முன்புதான், ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது.
மினி பஸ் சென்னையில் மே மாதம் இயங்கும்

இதில் குறைந்த புள்ளிகளைச் சமர்ப்பித்திருந்த 'டாடா மோட்டார்ஸ்' நிறுவனத்துக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் இந்த நிறுவனத்துக்கு கொள்முதல் உத்தரவு வழங்கப்பட்டது.

100 மினி பஸ்கள் என்பதால், குறுகிய காலத்திலேயே சேசிஸ்களைத் தயாரித்து மாநகரப் போக்குவரத்துக்கழகத்திடம் ஒப்படைத்துவிடுவர்.

இந்த சேசிஸில் பாடி கட்ட குறைந்தபட்சம் 25 நாள்கள் ஆகும். ஒரே நேரத்தில் அதிகபட்சம் 10 சேசிஸ்களில் பாடி கட்ட முடியும். எனவே அடுத்த இரண்டு மாதங்களில் சென்னையில் மினி பஸ்கள் இயங்கத் தொடங்கும் என்றார் அவர்.    

நன்றி :- தினமணி, 13-03-2013                                   



0 comments:

Post a Comment

Kindly post a comment.