Thursday, March 28, 2013

நெல்சன் மண்டேலா மருத்துவமனையில் அனுமதி !


ஜோகன்னஸ்பர்க், மார்ச் 28-

தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபரும், இனவெறிக்கு எதிரான தலைவருமான நெல்சன் மண்டேலா நேற்று நள்ளிரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நுரையீரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மண்டேலாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அரசு செய்தி வெளியிட்டுள்ளது.

94 வயதான மண்டேலா, இந்த மாதத் துவக்கத்தில் ஏற்கனவே பரிசோதனைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மண்டேலாவுக்கு ஆபரேசன் மூலம் பித்தப்பைக் கற்கள் அகற்றப்பட்ட பிறகு, நுரையீரல் தொற்று காரணமாக டிசம்பர் மாதம் 3 வாரங்கள் வரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

27 ஆண்டு சிறைவாசம் முடிந்து 1990-ல் விடுதலையான பிறகு டிசம்பர் மாதம்தான் அதிக நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருந்தார்.

http://www.maalaimalar.com/2013/03/28160305/Nelson-Mandela-back-in-hospita.html

0 comments:

Post a Comment

Kindly post a comment.