Monday, March 25, 2013

தயாபரன் திருக்குறள் திருமூலநாதனை எப்படிப் புகழ்ந்துரைப்பதென்பதை வலைப்பூ அன்பர்கள்தான் சொல்ல வேண்டும்.

                                                                               


தமக்கு 4 வயது ஆகும்பொழுது 1330 குறட்பாக்களையும் எவ்விதம் கேட்பினும் சரியாகச் சொல்லி LIMCA BOOK OF RECORDS சாதனை நிகழ்த்தியவர்,

66 மணித்துளிகளில் ( MINUTES ) 9807 சீர்களையும் சரியாகச் சொல்லி கின்னஸ் சாதனை புரிந்தவர்,

தமக்கு 8 வயதாகும்பொழுது எண் கவனகம் ( அஷ்டாவதானம் ) நிகழ்த்தி வியப்பினை ஏற்படுத்தியவர்,

தமக்கு 10 வயதில் கணினியில்  DIPLOMO & PG DIPLOMO பெற்றவர்,

அரசியல், அறிவியல், ஆன்மீகம், விளையாட்டு, மற்ரும் பொது அறிவு தொடர்பான சுமார் 60,000 வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் நொடிப்பொழுதில் விடையளிக்கும் திறமை படைத்தவர்,

அறிவியல் திறனாய்வுத் தேர்வில் 8-ஆம் வகுப்புப் படிக்கும்பொழுது தமிழக அளவில் மூன்றாம் பரிசு பெற்றவர் ( 2002 ),

கோவை சின்மயானந்தா பள்ளியில் 1000 பேர் பங்கேற்ற  பகவத் கீதை ஒப்புவிக்கும் போட்டியில், வெற்றி பெற்ற அறுவரில் ஐந்தாவதாக வந்தவர், ( 2002 ),

பிரெஞ்சு மொழித் தேர்வில் 96 விழுக்காடு பெற்று தமிழகத்தில் முதலிடம் பெற்றவர் ( 2008 ). பிரான்சு நாட்ட்டின் கல்வியமைச்சர் கையெழுத்திட்ட சான்றிதழையும் பெற்றவர்,

இந்திய இலங்கை நாடுகளில் சுமார் ஒரு லட்சம் கிலோமீட்டர் சுற்றுப் பயணம் செய்து 400-க்கும் மேற்பட்ட பரிசுகள், 600-க்கும் மேற்பட்ட விருதுகள், 10 தங்கப் பதக்கங்கள், 2 வெள்ளிப் பதக்கங்கள் வென்றவர், ( அப்பொழுது இவரது வயது 8-க்குள் ),

தமது 4 வயது சாதனைக்காக அமெரிக்க நாட்டினின்றும் “கெளரவ டாக்டர்” பட்டம் பெற்ற ஒரே இளவயதுக்காரர்,

திருக்குறள் தவிர வேறி 30-க்கும் மேற்பட்ட இலக்கியங்களினின்றும் ஏறத்தாழ 10,000 வரிகள் மனப்பாடம்,செய்தவர்,

7 வயதுக்குள் இந்தி மொழியின் முதல் மூன்று தேர்வுகளையும் எழுதி தேர்ச்சி பெற்று, தட்சிணபாரத இந்திப் பிரச்சார சபையின் பாராட்டைப் பெற்றவர், இந்தியைத் தாய் மொழியாகக் கொண்டவர்களே செய்யாத சாதனை இது.

1901 முதல் 2100 வரையிலான ஆண்டுகளுக்குச் சரியாக நொடிப்பொழுதில் கிழமை கூறும் திறமையையும், தமிழ் எழுத்துக்களை மாற்றி எழுதிக்காட்டி அவற்றைத் தட்டொளி மூலம் சரியான தமிழ் எழுத்துக்களாக விளங்க வைக்கும் சாதனைகளையும் தமது 4 வயதிலேயே செய்து காட்டியவர்,

உலகின் எந்த ஒரு நாட்டின் தலைநகரையும் உடனே கூறும் திறமை படைத்தவர்,

தமது 4, 5 வயதுகளில் தமிழ்நாட்டரசுப் பாடத் திட்டப்படி முறையே மூன்றாம் மற்றும் நான்காம் வகுப்புப் பாடங்களில் தேர்வெழுதி வெற்றி பெற்றவர்,

இரு பெரும் இதிகாசங்கள், பெரிய புராணம் ஆகியவற்றையும் , மகாத்மாவின் சத்திய சோதனை உட்பட ஏராளமான தியாக வரலாற்று நூல்களையும் தமது 8 வயதுக்குள்ளேயே படித்தவர்,

இலங்கையில் 11 நாட்கள் சூறாவளிச் சுற்றுப்பயணம் செய்து  32 நிகழ்ச்சிகளில் பங்குபெற்றும், திரிகோணமலை கடற்கரையில் 35 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலையைத் திறந்து வைத்துத் தமிழகத்திற்குப் பெருமை சேர்த்தவர்,

கோவை கல்லாறு சச்சிதானந்த ஜோதி நிகேதனில் பயின்று +2 தெர்வில் 97 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்று, கிண்டி அண்ணா பல்கலைக் கழகத்தில் பொறியியல் பட்டமும், பின்னர் பெங்களூரு இந்திய அறிவியல் பயிலகத்தில் ME பட்டமும் பெற்றவர்.

 Ph.D. in Telecommunications branch (pursuing from 2012 onwards), Department of Electrical communications Engineering, Indian Institute of Science, Bangalore.

மேடைகள்தோறும் தமிழிசைப் பாடல்களைப் பாடிவரும் இவருடைய நினைவாற்றலைக் கண்டும், கேட்டும் எழுச்சி பெற்று எண்ணற்ற மாணாக்கர்கள் திருக்குறள் பயின்று வருவது போற்றத் தக்கது.

இவர் மேடைகளில் திருக்குறள் கூறுவதைக்கேட்டே 1330 குறட்பாக்களையும் எப்படிக் கேட்பினும் கூறும் திறன் பெற்றவர் இவர் தாயார் திருமதி நாகவல்லி தயாபரன்

தமது 5 வயதிலேயே உலகத் திருக்குறள் மையத்தின் வாழ்நாள் இயக்குநர் ஆனவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

துறையூர் திருக்குறள் பயிலரங்கம் மூலம் 6, 7, 8 வகுப்பு மாணாக்கர்களுக்குத் தாமே தமது 7, 8 வயதுகளில் திருக்குறளைப் போதித்து, 100 குறட்பாக்களைக் கூறும் ஒவ்வொருவருக்கும் ரூபாய் 50/- வீதம் வழங்கியவர்.

1998 முதல் திருக்குறள் திருமூலநாதன் அறக்கட்டளை மூலம் 1330 குறட்பாக்களையும் பிழையின்றி ஒப்புவிப்பவருக்கும், முதல் 600 குறட்பாக்களைப் பிழையின்றி ஒப்புவிப்பவருக்கும் முறையே ரூ.1330/-. ரூ.500/- வீதம் பணமுடிப்பு வழங்கி வருகிறார். 2011 வரை 46 பேர் பணமுடிப்பைப் பெற்றுள்ளனர்.

புகழ்பெற்ற கல்வியாளர்கள், துணை வேந்தர்கள், தமிழக, ஆந்திர மாநில முதல்வர்கள், நடுவண், மாநில அமைச்சர்கள், நீதியரசர்கள், பல்துறை அறிஞர்கள், பல்வேறு பகுதிகளில் வாழும் பொது மக்கள் என எல்லோருடைய பாராட்டுக்களையும் பெற்றவர்.

தமிழக முதல்வரின் வாழ்நாள் சாதனையாளர் பரிசு பெற்றவர்.

ஒரே நேரத்தில் 16 கவனகங்களைச் செய்து அசத்தும் “ சோடச அவதானி”
தமிழ், சமஸ்கிருதம், இந்தி, ஆங்கிலம், பிரெஞ்சு மொழி அறிந்தவர். 

  1. Thirukkural Thirumoolanathan Arakkattalai ... - Google Sites

    https://sites.google.com/site/thirumoolanathand/thirukkural-thirumool...
    Started in the year 1997, Thirukkural Thirumoolanathan arakkattalai is a non - government aided establishment, that spreads the concepts of the Tamil literature ...
  2. Thirumoolanathan D - Google Sites

    https://sites.google.com/site/thirumoolanathand/
    I am a Ph.D scholar in the Department of Electrical Communication Engineering at the Indian Institute of Science, Bangalore. I work jointly under Prof. Rajesh ...
  3. - Thirumoolanathan D - Google Sites

    https://sites.google.com/site/thirumoolanathand/resume
    Thirumoolanathan D. Search this site. Home · About me · Academics · Thirukkural Thirumoolanathan Arakkattalai · Contact us ... 
                              திருமந்திரம் 1155-1254 ( 100 பாடல்கள் )
                                               8. ஆதார ஆதேயம் 
    ( ஆதாரம்-இடம், ஆதேயம்- இடத்தில் உள்ள பொருள்
     சக்தி இரண்டாயும் உள்ளாள் )
     (1254 )

    அம்மையும் அத்தவனும் அன்புற்றது அல்லது
    அம்மையும் அத்தனும்  ஆர் அறி வார் என்னை
    அம்மையொடு அத்தனும் யானும் உடனிருந்து
    அம்மையோடு அத்தனை யான்புரிந் தேனே. ( 100 )  

    திருமூலரின் திருமந்திரம் 3000 பாடல்களைக் கொண்டது.

    திருமந்திரத்தில் மானுடப் பிறப்பின் சூட்சுமம், மற்றும்

    வாழ்க்கையின் இரகசியங்கள் அனைத்தும் உள்ளன.

    திருமூலநாதனுக்கு இவ்வளவு சிறப்பியல்புகளும்

    ஒரே பிறவியில் வந்ததா? பெற்றோரின் பங்கு யாது ?

    திருமூலரின் திருமந்திரமே தீர்ப்புச் சொல்லும். 

    ஈன்றெடுத்த இணையர் :-

    பூவை.பி.தயாபரன் - நாகவல்லி தயாபரன்.

                                                                                            ( இன்னும் வரும் )







 

0 comments:

Post a Comment

Kindly post a comment.