Friday, March 22, 2013

ஐ.நா. வாக்கெடுப்பு எதிரொலி: திரிகோணமலை இந்தியன் ஆயில் கிடங்கைக் கையகப்படுத்த இலங்கை திட்டம் !


கொழும்பு, மார்ச் 21-

இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்திற்கு ஆதரவாக இன்று இந்தியா ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் வாக்களித்தது. இதனை அடுத்து இலங்கையின் வடகிழக்கு திரிகோணமலையில் உள்ள பழமையான 99 இந்தியன் ஆயில் சேமிப்புக் கிடங்கின் பாதியைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரத் திட்டமிட்டிருப்பதாக இலங்கை அறிவித்துள்ளது.

லங்கா ஐ.ஓ.சி. என்றழைக்கப்படும் இந்த இந்தியன் ஆயில் சேமிப்பு கிடங்குகளில், பயன்படுத்தப்படாமல் உள்ள ஆயில் கிடங்குகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள இலங்கை திட்டமிட்டுள்ளதாகச் செய்தித்துறை அமைச்சர் ரம்புக்வெல்லா தெரிவித்துள்ளார்.

கடந்த 2003-ம் ஆண்டு இலங்கையின் சில்லரை வணிக வருமானத்தில், மூன்றில் ஒரு பங்கு வருமானம் இந்த லங்கா ஐ.ஓ.சி. மூலம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஐ.நா. மனித உரிமை அமைப்பின் வாக்கெடுப்பிற்கும், இதற்கும் எந்த சம்பந்தமில்லை என்று இலங்கை கூறியுள்ளது. 

இலங்கை அரசு கையகப்படுத்த நினைக்கும் திரிகோணமலை ஆயில் கிடங்குகள், இரண்டாம் உலகப்போரின்போது இந்தியாவுக்குக் குத்தகைக்கு கொடுத்தது குறிப்பிடத்தக்கது.                                                              

நன்றி :- மாலை மலர், 21-03-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.