Friday, March 22, 2013

மாமல்லபுரத்தில் ரூ.250 கோடி செலவில் உலகத்தரத்தில் கடல்வாழ் உயிரினக் காட்சியகம் !

தமிழக பட்ஜெட்டில் கூறப்பட்டு இருப்பதாவது:-

2013-2014-ஆம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்ட சுற்றுலா மையங்களில் அடிப்படை வசதிகளைத் இத்திட்டத்தின் மூலம் மேம்படுத்த 67.91 கோடி ரூபாய் அளவிலான பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும் "தமிழ்நாட்டிற்கு செல்வோம் 2014" என்ற உத்தியின் அடிப்படையில் சுற்றுலா மேம்பாட்டிற்கான விளம்பரப் பணிகளை மேற்கொள்ள 10 கோடி ரூபாய் மாநில நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

2013-2014-ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் சுற்றுலாத் துறைக்காக 153.95 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மீன்வளத் துறையின் தொழில்நுட்ப உதவியோடு, பொதுத்துறை தனியார் துறை பங்கேற்புடன் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மூலமாக மாமல்லபுரத்தில் உலகத்தரத்திலான கடல்வாழ் உயிரினக் காட்சியகம் 250 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும். அரியலூரில் ஒரு புதிய தொல்படிவப் பொருள் அருங்காட்சியகம் இரண்டு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.                                                     

நன்றி :- மாலை மலர், 21-03-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.