Friday, March 29, 2013

தென் ஆப்பிரிக்கக் கோடீஸ்வரர் தனது சொத்தில் பாதியை ஏழைகளுக்கு வழங்க முடிவு !



ஜொஹனஸ்பர்க், ஜன. 31-

தென் ஆப்பிரிக்காவின் சுரங்கத்தொழில் நடத்திவரும் பெரும் பணக்காரர் பேட்ரைஸ் மோட்செப். 10 ஆயிரத்து 850 கோடிக்கு சொந்தக்காரரான இவர் தனது சொத்துக்களின் பாதியை ஏழைகளின் மேம்பாட்டுக்கு வழங்க முடிவு செய்துள்ளார்.

உலகின் பெரும் பணக்காரர்களான பில் கேட்ஸ், வாரன் பப்பெட் ஆகியோர் ஏழைகளின் மேம்பாட்டிற்காக பல்வேறு பணிகளைச் செய்து வருவது என்னுள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியதாக மோட்செப் கூறியுள்ளார். ஏழைகளின் படிப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கு இந்த பணம் செலவிடப்படும் என்றும் அவரின் மோட்செப் அறக்கட்டளை கூறியுள்ளது.

இதை அவரின் மனைவி பிரிசியஸ் மோட்செப் வரவேற்றுள்ளார்.                  

நன்றி :- மாலைமலர், 31-01-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.