Friday, March 29, 2013

பிழை இன்றித் தமிழ் எழுத வழிகாட்டும் எளியதோர் இலக்கண நூல் !

பெரும்பாலும் ஆங்கிலவழி மூலம், படித்துவிட்டு தமிழில் வலைப் 

பதிவர்களாக வலம் வருவோருக்குத் தமிழில் எழுதும்பொழுது ஏற்படும்  

ஐயப்பாடுகள் பற்பல.

எழுத்துக்களா ? ? எழுத்துகளா ?

”ஒரு” எங்கு வரும் ?  ”ஓர்” என்று எங்கு  எழுத வேண்டும் ?

இந்தப் புத்தகம் என்னுடையது அல்ல ! -இந்த வாக்கியத்தில் உள்ள பிழை 

என்ன ? 

அருகாமை, முயலாமை என்றெல்லாம் எழுதுவது சரியா ?

எங்கு மூணு சுழி ? எங்கு ரெண்டு சுழி ? 

எங்கு “”ர”  ----எங்கு “ற” போடவேண்டும் ?

ஒற்றெழுத்து எங்கு போடவேண்டும் ? எங்கு போட வேண்டியதில்லை ?

இவ்வாறு பல வினாக்களுக்கும் விடையளிக்கும் வகையில்

 tamilpaper . net -இல் தொடராக வெளிவந்து  பலரது பாராட்டுகளைப் 

பெற்ற  கொத்தனார்  நோட்ஸ் - தற்பொழுது   ”ஜாலியா இலக்கணம் “ 

என்னும்   தலைப்பில்  முழுமையான நூல் வடிவில்  ரூபாய் 75/ விலையில்   

கிழக்கு  பதிப்பகம்  வெளியிட்டுள்ளது. 

தேவைப்படுவோர் வாங்கிப் பயன்பெறுக.

கைப்பேசி எண் ;- 94459 01234 , 9445 97 97 97

தகவல் உதவி :- அலமாரி, மாத இதழ், சென்னை-600 014.


1 comments:

  1. தங்கள் நூலறிமுகத்தை வரவேற்கிறேன்.

    ReplyDelete

Kindly post a comment.