Friday, March 29, 2013

மலாலாவின் வாழ்க்கை வரலாறு: 30 லட்சம் டாலர் ஒப்பந்தம் !

தலிபான் பயங்கரவாதிகளால் சுடப்பட்ட பாகிஸ்தான் பள்ளி மாணவி மலாலாவின்  வாழ்க்கை வரலாறு வெளியிடப்பட உள்ளது. இதற்காக அவருக்கு 30 லட்சம் டாலர்கள் (ரூ.16 கோடி) வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

மலாலாவின் வாழ்க்கை வரலாற்றை வெளியிட 30 லட்சம் அமெரிக்க டாலர்கள் வழங்க வகை செய்யும் ஒப்பந்தத்தில் பதிப்பகங்கள் கையெழுத்திட்டுள்ளன. இத்தகவலை கார்டியன் பத்திரிகை தெரிவித்துள்ளது.

பிரிட்டனில் வைடன்பெல்ட் அன்ட் நிக்கல்சன் என்ற பதிப்பகமும், உலகின் பிற நாடுகளில் காமன்வெல்த் அன்ட் டைலிட்டிங் பிரவுன் பதிப்பகமும் இந்த நூலை வெளியிடும்.

பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கு பகுதியில் கடந்த 2012-ம் ஆண்டு அக்.9-ம் தேதி பெண்கள் கல்வியை வலியுறுத்தியதற்காக தலிபான் பயங்கரவாதிகளால் மலாலா யுசுப்சாய் சுடப்பட்டார். மேற்கத்திய வாழ்க்கை முறை, பெண் கல்வியை வலியுறுத்தியதற்காக மலாலாவைச் சுட்டதாக தலிபான் அமைப்பு தெரிவித்தது.

பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் லண்டன் கொண்டு செல்லப்பட்டு அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் உயிர் பிழைத்தார். தற்போது லண்டனில் உள்ள பள்ளியில் பயின்று வரும் மலாலாவின் வாழ்க்கை வரலாற்றை வெளியிட இங்கிலாந்தைச் சேர்ந்த பதிப்பகம் ஒன்று 3 லட்சம் அமெரிக்க டாலர்கள் வழங்க ஒப்புக் கொண்டுள்ளது. 


இதுதொடர்பாக மலாலா கூறியதாவது: இது எனது வாழ்க்கை வரலாறு மட்டுமே இல்லை. கல்வி பயில முடியாத நிலையில் உள்ள 6.1 கோடி குழந்தைகளின் கதையாகும். ஒவ்வொரு சிறுவனும், சிறுமியும் கண்டிப்பாகக் கல்வி கற்க வேண்டும் என்பதே அவர்களின் அடிப்படை உரிமையாகும். இப்புத்தகம் உலகின் அனைத்து பகுதியினரையும் கவரும் என்றார் மலாலா  

நன்றி :- தினமணி, 29-03-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.