சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள திருக்குறள் தேசிய நூல் கோரிக்கை மாநாட்டில் சிறந்த தமிழ் அமைப்புகளுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.
இது குறித்து திறக்குறள் தேசியநூல் ஆய்வுக் கருத்தரங்க அமைப்பாளர்கள் வெளியிட்ட அறிவிப்பு:
சென்னையில் எழும்பூர் அருங்காட்சியகத்தில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 17) நடைபெறும் திருக்குறள் தேசிய நூல் கோரிக்கை மாநாட்டில் உலக அளவில் செயல்படும் சிறந்த தமிழ் அமைப்புகளுக்கு விருது வழங்கிச் சிறப்பிக்க உள்ளோம்.
உலக அளவில் சிறந்த தமிழ்ச் சங்கத்துக்கான விருது மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்துக்கு வழங்கப்படுகிறது. இவ்விருதை மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ. இராசேந்திரன் பெற்றுக்கொள்கிறார்.
இதுபோல் இந்திய அளவில் சிறந்த தமிழ்ச் சங்கத்துக்கான விருது பெங்களூர் தமிழ்ச் சங்கத்துக்கும், தமிழக அளவில் சிறந்த தமிழ்ச் சங்கத்துக்கான விருது திருப்பூர் தமிழ்ச் சங்கத்துக்கும் வழங்கப்படுகிறது. விருதுகளைத் தமிழக தமிழ் வளர்ச்சித் துறை செயலர் மூ. இராசாராம் வழங்குகிறார்.
நன்றி :- தினமணி, 16-03-2013
0 comments:
Post a Comment
Kindly post a comment.