தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பழங்கால நாணயங்கள் கண்டெடுப்பு !
விளாத்திகுளம் வட்டத்துக்குள்பட்ட மெட்டில்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆர்.சின்னசோலையப்பன்.
இவரது வீட்டில் கழிவறைத் தொட்டி அமைப்பதற்காக கட்டடத் தொழிலாளர்கள் உதவியுடன் தரையை தோண்டும் பணி நடைபெற்றது.
அப்போது, சுமார் 8 அடி ஆழத்தில் தோண்டும்போது, அதில் மண்ணினால் செய்யப்பட்ட குடுவை தென்பட்டதாம். அந்த குடுவையை எடுக்க முற்படும் போது, அது உடைந்ததாம். அதில் சுமார் 208 பழங்கால நாணயங்கள் இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து தொழிலாளர்கள் அதை சின்னசோலையப்பனிடம் ஒப்படைத்தார்களாம். அவர் கிராம நிர்வாக அதிகாரி மாடசாமிக்கு தகவல் தெரிவித்தாராம். அதையடுத்து, விளாத்திகுளம் வட்டாட்சியர் சுந்தரகிருஷ்ணன், நாணயம் கண்டெடுக்கப்பட்ட இடத்தைப் பார்வையிட்டார்.
பின்னர் அந்த நாணயத்தைக் கைப்பற்றி, வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்தனர். இதுகுறித்து வட்டாட்சியர் சுந்தரகிருஷ்ணன் கூறுகையில், இதுகுறித்த தகவல் மாவட்ட ஆட்சியருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்சியரின் உத்தரவையடுத்து, இந்த நாணயங்கள் தொல்லியல் துறைக்கு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்படும் என்றார் அவர்.
நன்றி :- தினமணி, 11-03-2013
0 comments:
Post a Comment
Kindly post a comment.