Thursday, February 7, 2013

இலஞ்சத்தை ஒழிக்க, தமிழகமுதல்வருக்கு, டாக்டர் கோவிந்தன் எழுதிய புதிய யோசனைக் கடிதம். !

 
 Transparency Iinternational
10, ஹால்ஸ் சாலை, கீழ்ப்பாக்கம்,  சென்னை- 600 010

 

முதலமைச்சர் அம்மாவின் நேரடிப் பார்வைக்கு வைக்க வேண்டும் விண்ணப்பம் (  ஆகஸ்டு 2012 )

அனுப்புநர்
          

டாக்டர். டி.வி.கோவிந்தன், M.B.B.S.M.S.    ( Member of Transparency Iinternational )
10, ஹால்ஸ் சாலை, கீழ்ப்பாக்கம்,  சென்னை- 600 010

பெறுநர்
       

 மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள்

மாண்புமிகு அம்மா அவர்களுக்கு வணக்கம்,

இலஞ்சம் கொடுத்து அரசு இயந்திரத்தைத் தங்களுக்குச் சாதகமாகத் திருப்பிக் கொண்டு அப்பாவிகளின் வேலைகளை ஓரம் கட்டச் செய்வோரை, அரசுப் பணியாளர்களும், அரசியல்வாதிகளும் பிடித்துக் கொடுக்க ஊக்குவிக்கவேண்டும்.

மக்கள் தாங்களாகவே வலியவந்து இலஞ்சம் கொடுக்கிறார்கள் என்றும், அவர்களது கோரிக்கைகளில் உள்ள குற்றம், குறைகள், அநியாயங்களை மறைத்து, அவர்களுக்குச் சாதகமாக வேலைகளைச் செய்து கொடுக்கும்படி இலஞ்சம் கொடுத்து வற்புறுத்துகிறார்கள் என்றும், தனக்கு முன்னதாகக் காத்திருப்போரின் வேலை எப்படியோ போகட்டும், தனது வேலையை முன்னதாக முடித்துக் கொடு, உடனே முடித்துக் கொடு, என்று இலஞ்சம் கொடுத்து நெருக்குகிறார்கள் என்றும் அரசியல் பணியாளர்களும், அரசியல் வாதிகளும் கூறுகிறார்கள். இவர்கள் இலஞ்சம் கொடுக்க வருவோரைப் பிடித்துக் கொடுக்க வேண்டும். பிடித்துக் கொடுப்போரை அரசாங்கம், பின்வருமாறு ஊக்குவிக்கவேண்டும்.

இப்படிச் செய்யும் அரசுப்பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு, விருப்ப இடமாற்றம், பணி முதிர்வின்போது பணி நீட்டிப்பு, வட்டியில்லா வீட்டுக் கடன், வாகனக் கடன் அளிப்பது, அதில் முன்னுரிமை அளிப்பது போன்றவற்றை அளித்து ஊக்குவிக்கலாம். இந்த நற்பணியைச் செய்யும்போது கொல்லப்பட்டுவிட்டால், கொல்லப்பட்டவரின் பிள்ளைகளின் கல்விச் செலவை அரசே ஏற்கவும், அரசுப்பணியில் முன்னுரிமை அளிக்கவும் வேண்டும். இச்செயல்கள் மக்கள் சுமக்கும் ஊழல் சுமையைக் குறைப்பதால், இவைகளுக்கு ஆகும் செலவை, அரசு சுமையாக நினைக்கக் கூடாது. விளையாட்டு வீரர்களுக்கெல்லாம் ஊக்கம் கொடுக்கிற நாம், உண்மையான இந்த வீரர்களுக்கும் ஊக்கம் கொடுக்கவேண்டும். இது சமூகத்திற்கு நற்பயனையே அளிக்கும்; சுமையாகாது.

இதேபோல் தனக்கு இலஞ்சம் கொடுக்க வருபவரைப் பிடித்துக் கொடுக்கும் அரசியல்வாதிகளுக்குத் தேவையான தேர்தல்களில் போட்டியிடும் செலவை அரசாங்கம் அளிக்கவேண்டும்.

இவை எல்லாம் நல்லாட்சி அமையவும், தங்கள் ஆட்சி என்றென்றும் தொடரவும் வழி வகுக்கும். தமிழ்நாடு அரசாங்கம் இவைகளுக்கு அவசியமான வழிவகைகளைச் செய்து நல்லாட்சி அமைப்பதில்; முன்னோடியாக வழிகாட்டவேண்டும். இத்திட்டத்தினை சுமார் 10 வருட காலத்திற்குப் பரிசோதனையாக நடத்தினால்கூடப்போதும்.
                                                                                                                                                                                            
.டாக்டர்.டி.வி.கோவிந்தன்

http://www.transparencyindiatn.org/





 2012 -ஆம் ஆண்டு முழுவதும் இவர்கள் ஆற்றியுள்ள செயல்பாடுகளைக் காண
பின்வரும் இணையத்திற்குச் சென்று பார்க்கலாம்.

http://www.transparencyindiatn.org/annual-report-2012.pdf                                                                         
தகவல் உதவி :-

மக்கள் நினைத்தால்

தமிழ்நாடு லஞ்சம் கொடாதோர் இயக்க மாத இதழ்

தமிழ்நாடு லஞ்சம் கொடாதோர் இயக்கம், ( ஆகஸ்டு 2012 )

( 10 ஆண்டுகளுக்கு மேல் இயங்கிவருகிறது )

எண் 53, 2-வது குறுக்குத் தெரு, பாரதி நகர்,
அம்பத்தூர், சென்னை-600 053.



0 comments:

Post a Comment

Kindly post a comment.