Sunday, February 17, 2013

தன்னைத்தானே வருத்திக்கொண்டு உயிர் விடுவதற்கு இந்தியில் ” சந்தாரா” ( ஜைனம் ) )!

தேவை ஒரு நம்பிக்கை நங்கூரம்!
எஸ். வைத்யசுப்ரமணியம்
 

First Published: May 3, 2012 1:33 AM, Last Updated: Sep 20, 2012 6:35 AM

கட்டுரையின் ஒரு பகுதி  நன்றி:-ினி

தற்கொலை பற்றி பல்வேறு சமயங்கள் தங்களுடைய கருத்துகளைக் கூறியுள்ளன. இந்தியச் சமயங்கள் தனிமனித உரிமையாகத் தற்கொலையை ஒப்புக்கொள்ளவில்லை. ஆணுக்கோ பெண்ணுக்கோ அது தனி உரிமை ஆகாது.

தற்கொலை அஹிம்சைக் கோட்பாட்டை மீறிய செயல் என்று இந்து மதம் உறுதியாக நம்புகிறது. பாவச் செயலாகவும், மற்றொரு உயிரைப் பறிப்பதற்குச் சமம் என்றும் கருதுகிறது. ஆசையோ பாசமோ தன்னலமோ இல்லாமல் உயிரைப் பொது நலனுக்காகவே மேற்கொள்ளப்பெறும் ப்ரயோபவேசத்தை மட்டும் அது அங்கீகரிக்கிறது. மற்றபடி தற்கொலையை இந்து மதம் கடுமையாகச் சாடுகிறது.

தற்கொலை செய்பவர்கள் அவர்களுக்கென்று விதிக்கப்பட்ட நாள் வரும் வரை ஆவிகளாகவே சுற்றுவார்கள் என்றும் இந்து மதம் நம்புகிறது. புத்தமதம் கூட கர்ம சம்சாரத் தத்துவத்தில் நம்பிக்கை கொண்டுள்ளது.

பிற உயிரை வதைத்தல், தன் உயிரைத் தானே மாய்த்துக் கொள்ளுதல் ஆகியனவற்றை எதிர்மறைச் செயல்பாட்டு வடிவமாகவே அவர்கள் கருதுகின்றனர் -

சந்தாரா எனும் அஹிம்சைவழி சாகும் வரை உண்ணாவிரதத்தை தவிர. சமணம் தற்கொலையை அங்கீகரிப்பதற்குரிய ஆவணம் நமக்குக் கிட்டவில்லை.

ரோமாபுரிக் கத்தோலிக்கத் திருச்சபை, தற்கொலையை ஒரு கொடூரமான பாவமாகக் கருதுகிறது. மனித உயிர் என்பது கடவுளின் சொத்து என்றும் அது இவ்வுலகிற்கு வழங்கப்பட்ட கொடை என்றும் கருதுகிறது. அதனை அழிக்க முயல்வது கடவுளுக்குரிய எல்லையை மீறுவதாகும் என்றும் நினைக்கிறது.

பழமைவாத எதிர்ப்பாளர்கள் என்று கருதப்படும் ப்ராடெஸ்டென்ட் கிறிஸ்துவர்களும் தற்கொலையைத் தன்னைத் தானே மாய்த்துக் கொள்வது என்றும் மற்றோர் மனித உயிரைக் கொல்வதற்கு இணையானது என்றும் கருதுகிறார்கள். எனவே, கிறிஸ்தவ மதமும் இதனைப் பாவச் செயலாகவே நினைக்கிறது.

இஸ்லாமும் தற்கொலையை ஒருவரின் ஆன்மிகப் பயணத்திற்குத் தடையாக இருக்கும் செயல் என்றும் எனவே, அது மகாபாவம் என்றும் பகர்கிறது. இஸ்லாமைச் சார்ந்த அறிஞர்கள் புனிதத் திருக்குர்ரானிலிருந்து மேற்கோள்களையும் தருகின்றனர்.

குர்ரானின் திருக்கட்டளைப்படி, தற்கொலை என்பது தடுக்கப்பட வேண்டிய செயலாகும். இது மன்னிக்க முடியாத பாவம் என்றும், கிறித்துவ சமயத்தில் சொல்லப்பட்ட நிலைத்த பாவத்திற்கு இணையானது என்றும் கருதுகிறார்கள்.

ஈ, எறும்புகளுக்குக் கூடத் தீங்கு விளைவிக்கக் கூடாது என்று போதிக்கும் சமண சமயத்தில், வயது வந்த பருவ மங்கையை, மதத்திற்காகவே 
அர்ப்பணித்துவிடுவது ஓர் புனிதப்பணியாகவே கருதப்படுகின்றது. ஆனால்,  
அத்தகையோரைப் பார்க்கும் பொழுது, மனிதநேயமுடையவர்களால் ஏற்றுக் 
கொள்வது கடினமானதொரு செயலாகவே தோன்றும்.

ஆனால், இன்றைய உள்ளூர் தினசரி ஒன்றில் வந்த செய்தியைப் படித்தபின் எல்லோராலும் எளிதில் ஏற்றுக் கொள்ள முடியாத இன்னொரு செயலும் 

சமணத்தில் இருப்பது தெரியவந்தது.

கணவனை இழந்து 7 ஆண்டுகளாகிவிட்ட ஒரு 92-வயது மூதாட்டி. தாமாகவே முடிவெடுத்து, குடும்பத்தில் உள்ள அனைவரது ஒப்புதலுடன்,
13 நாட்கள் குடிநீர், உணவு அருந்தாமல், ஜெப மணிமாலையைக் கையில் வைத்துக்கொண்டு, இறைவன் நாமத்தை ஜெபித்துக் கொண்டே காலமானார் 

என்று வந்திருந்த செய்தியினை ஏற்றுக் கொள்ள இயலவில்லை..

விசாரித்தபோது ”சந்தாரா” என்னும் முறை என்றும்,  அது ஜைனமதக் கோட்பாடு  என்றும்
கூறினர்.

 ( தன்னைத்தானே வருத்திக் கொண்டு உயிரை விடுதல்)

இதற்கு வயது கூட ஒரு தடை இல்லையாம்.

மதக் கோட்பாடானதால் சட்டத்திற்கு இங்கே வேலை இல்லை. அவரது உயிர் 

ஜீவ மோட்சம் அடைந்தது என்ற இறுதித் தகவலுடன், தொடர்பு கொள்ள 

வேண்டிய நபர், கைபேசி எண்ணும் கொடுக்கப்பட்டிருந்தது. 

சந்தாரா என்று  கணினியில் தட்டச்சு செய்தால்
மேலும் பல தகவல்கள் கிடைக்கின்றன.                                                         





   




0 comments:

Post a Comment

Kindly post a comment.