Tuesday, February 19, 2013

வெண்ணெயைக் கையில் வைத்துக் கொண்டு ...........மூலிகை வளம் !



புதன், 4 ஜூலை, 2007

மூலிகைவளம் வலைப்பூ,   பெரியவர் குப்புசாமி அவர்களால்,

 2007, ஜுலை, 4, புதன்கிழமை ,அதிகாலை 2.10 மணியளவில்

துவக்கப்பட்டது. எமது பார்வைக்கு  இன்றுதான் கிடைத்தது.

நல்லதோர் வலைப்பூவை அன்பர்களோடு பகிர்ந்து கொள்வதில்

பெருமகிழ்ச்சி. தொடர்ந்து படித்துப் பயன்  பெறுக.


http://mooligaivazam-kuppusamy.blogspot.in/



மூலிகைவளம்

பழங்காலத்தில் மூதாதையர்கள் உடல் ஆரோக்கியத்தைக் காப்பாற்ற மூலிகைச் செடிகளின் இலை, வேர், காய், பழம், பட்டை, மற்றும், விதைகளைப் பயன் படுத்தினர்.

பழங்காலத்தில் வாழ்ந்த சித்தர்கள், தன்வந்திரி, மூலனார், நாகர்ஜுனா, போன்றவர்கள் அறிவுத் திறனாலும் அனுபவத்தாலும் கண்ட உண்மைகளைப் பல மூலிகைகளைக் கண்டு பிடித்து ஏடுகளில் எழுதிவைத்துள்ளனர்.

சுமார் 4000 வருடங்களுக்கு முன்பே ரிக் வேதத்தில் முலிகை மருத்துவத்தைப் பற்றி எழுதப்பட்டுள்ளது. மற்றும் ஆயுர் வேதமருத்துவத்தில் கி.மு. 600 ல் மூலிகை குணம் தீர்க்கும் நோய்கள் பற்றி 341 மருந்துச் செடிகள் பற்றி எழுதப்பட்டுள்ளது.

தற்பொழுதும் இது நடைமுறையில் உள்ளது. நம் இந்திய நாட்டில் சுமார் 2000 முதல் 7000 வகை மூலிகைச் செடிள், மரங்கள் உள்ளன. இவற்றில் 700 முதல் 1000 வரை மூலிகைச் செடிகள் நாட்டு மருந்துகள் தயாரிப்பிலும் 100 முதல் 150 மூலிகைகள் ஆங்கில மருத்துவத்திலும் பயன் படுத்தப்படுகின்றன.

நம்மிடம் மூலிகைச் செடியிலிருந்து மூலப்பொருட்களைப் பிரித்தெடுக்க உகந்த மேம்பட்ட தொழில் நுட்பங்கள் இல்லாமையால் மூலிகை மருந்து உற்பத்தியில் நம் நாடு 15 வது இடத்தை வகிக்கின்றது. நமது நாட்டில் குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல், போன்ற தட்ப வெப்ப நிலங்களில் வளரும் மூலிகைகள் உள்ளன.

அதனால்ஏற்றுமதியில்முன்னேற்றம்அடைந்துள்ளோம். மூலிகை வளம் கொழிக்கும் நம் நாட்டில் தீராத நோய்களையும் பக்க விளைவுகள் இன்றிக் குணப்படுத்தவும், பிணியின்றி வாழவும் இயற்கையான முறையில் பயிர் செய்யப்பட்ட தானியங்கள், மூலிகைகள் வாங்கி உபயோகிக்கவும், ஆங்கில மருத்துவத்தை விட மூலிகை மருத்துவப் பணச்செலவு குறைவாக இருப்பதாலும், மேலும் பக்க விளைவுகளும் இல்லை என்பதாலும் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

ஆகவே பல வகை மூலிகைகளைப்பற்றி யாவரும் அறியவும், இரகசியம் எதுவும் மறைக்காமல் வெளியிடப்படும்.

க.பொ.குப்புசாமி கோவை-641 037.

இடுகையிட்டது kuppusamy நேரம் 2:10 AM

நன்றி, பெரியவர், குப்புசாமி அவர்களே !

1 comments:

Kindly post a comment.