Friday, February 1, 2013

தமிழ் உலகம் நாளும் ஒரு சொல் !

http://naalumorusol.wordpress.com/about/

தமிழ் உலகம் நாளும் ஒரு சொல்
தமிழ் உலகுடன் தமிழ்ச் சொற்களைப் பொருள் உணர்ந்து பரப்புவோம்

வணக்கம்.

யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; – கணியன் பூங்குன்றனார், புறநானூறு (192) தமிழ் உலக மடலாடற் குழு 1999ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

உலகத் தமிழர்களை ஒன்றுபடுத்தும் நோக்கத்தில் இந்த இணையக் கருத்துப்பரிமாற்றக் குழு தொடங்கப்பட்டது. தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு, வாழ்கைமுறை, அரசியல் என எல்லாவற்றையும் பண்பட்ட வகையில் அலச அமைக்கப்பட்ட குழு.

தமிழ் உலகம் அறக்கட்டளை வழி தமிழுக்குச் சேவையாற்றியவர்களுக்கு அங்கீகாரம் அளித்து விருதும் வழங்குகிறது. அதோடு சாத்தியமான போது தமிழறிஞர்களின் வாரீசுதாரர் குடும்பங்களில் நலிவுற்றவ‌ர்களுக்குப் பொருளாதார உதவியும் வழங்குகிறோம். 

பாவாணர் அவர்களின் மகன் அடியார்க்கு நல்லான் அவர்களின் முழுப் பராமரிப்புக்கும் தமிழுலகம் அறக்கட்டளை ஆவண செய்துள்ளது.மற்றும் பாவாணர் அவர்களின் உறவுகளுக்கும் தமிழ் உலகம் அறக்கட்டளையின் சார்பில் பல்வேறு நல உதவிகளுக்கு ஆவண செய்தது.

தமிழ் உலகம் மடலாடற் குழுவின் உறுப்பினர்களால் பங்களிப்புச் செய்யும் படைப்புகளை ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் புத்தகமாக வெளியிட 2011ம் ஆண்டின் துவக்கத்தில் முடிவு செய்யப்பட்டது. தமிழ் உலக மடலாடற் குழுவில் சேர

 tamil-ulagam-subscribe@googlegroups.com 

எனும் மின்னஞ்சல் முகவரிக்கு கடிதம் அனுப்புங்கள்.

குளோபல் தமிழ் பிறகு தமிழ் உலக மடலாடற் குழுவில் நாளும் சில சொற்கள் என்ற தொடர் தமிழ் மாணவர்கள், ஆசிரியர்கள், மற்றும் தமிழ் ஆர்வலர்களுக்காக தொடங்கப்பட்டது. அதனை இங்கு வெளியிடுவதோடு புதிய சொற்களையும் இங்கு வெளியிடத் திட்டமிட்டுள்ளோம். பல சொற்களுக்குப் பல பின்னூட்டல்கள் கிடைத்துள்ளன அவற்றையும் அவ்வப்போது வெளியிட உள்ளோம். இனியும் வர உள்ள பின்னூட்டல்களையும் சேர்த்துக்கொள்வோம். இந்தத் தொடரை மேலும் மேம்படுத்த உங்களின் மேலான ஆலோச‌னைகளையும் வரவேற்கிறோம்.

அன்புடன்

ஆறு.பழனியப்பன்
ஆல்பர்ட்
மணியம்
மட்டுறுத்துனர்கள்
தமிழ் உலகம்



“சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே” – பாரதியார்​​

“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்” - பாரதி

0 comments:

Post a Comment

Kindly post a comment.