Thursday, January 31, 2013

பல்வேறு சூழல்களில் அறத்தின் விஸ்வரூபம் !



அறம் என்பது ஆளுக்கு ஆள், குடும்பத்துக்குக் குடும்பம், கூட்டத்துக் கூட்டம், சமூகத்துக்குச் சமூகம், இனத்துக்கு இனம், மதத்துக்கு மதம், இடத்துக்கு இடம், காலத்துக்குக் காலம் வேறுபடும்.

மலைகள்ளன் திரைப்படத்தில் எம்.ஜி.ஆர். கொள்ளை அடிக்கிறார். தேவைப்பட்டவர் என்று தாம் கருதுபவர்களுக்கு வாரி வழங்குகிறார். இதை அறம் என்றனர்.செல்வத்தைப் பறி கொடுத்தவர்களுக்கு அது அறம் ஆகுமா ?

ஒரு குடும்பம் உழைப்பை விற்றுப் பிழைக்கிறது. மற்றொரு குடும்பம் உடம்பை விற்று, ஆடிப்பாடிப் பிழைக்கிறது. இவற்றில் எது அறம் ? இது குடும்பத்துக்குக் குடும்பம் மாறுபடும் அறம்.

நாடோடிக் கூட்டமும் பிழைக்கிறது.நாடாளும் கூட்டமும் பிழைக்கிறது. இவற்றில் எது அறம் ? இது கூட்டத்துக் கூட்டம் மாறுபடும் அறம் ?

எது அறம் ? கால்நடை மேய்ப்பதா ? கலப்பைத் தொழிலா ? இது சமுதாயத்துக்குச் சமுதாயம் வேறுபடும் அறம்.

ஓர் இனம் உழைத்துப் பிழைக்கிறது ( வேளாளர் ) மற்றொரு இனம் உழைப்பவனை ஏமாற்றி உல்லாச வாழ்க்கை வாழ்கிறது. இவற்றில் எது அறம் ?( கோயில் பூசை செய்வோர் ) இது இனத்துக்கு இனம் மாறுபடும் அறம்.

ஒருவர் பல பெண்களை மணந்து கொள்ளலாம் என்பது முகம்மதியர் மதம். ஒருவன் ஒருத்தியை மட்டுமே மணந்து கொள்ள வேண்டும் என்பது இந்து மதம். இவற்றில் எது அறம் ? இது மதத்துக்கு மதம் மாறுபடும் அறம் ?

பயிர்த்தொழில் செய்வோர் புலால் உண்ணாமல் இருக்க முடியும். மீனவரால் முடியுமா ? இது இடத்துக்கு இடம் மாறுபடும் அறம்.

ஒருவன் ஒருத்தி-உடலுறவு வாழ்க்கையை அறநூல்கள் வலியுறுத்துகின்றன. இலக்கியங்களும், இலக்கணங்களும் பரத்தையர் உறவுக்குப் பாதை போட்டுள்ளன. இன்றைய சமுதாயம் boy friend, girl friend வாழ்க்கை இனிமை என்கிறது. இது காலத்துக்குக் காலம் மாறுபடும் அறம்.

                                 நூல்  ி
வாணுவம்பேட்டை 
திருவள்ளுவர் இலக்கிய மன்றம், 
ென்னை-60091
                  
எனவே 

அறம் என்பது வாழ்க்கையின் ஆற்றோட்டம் (அறத்து ஆறு - திருக்குறள் 37).   இந்த ஆற்றோட்டத்தைப் பொதுமக்கள் பலருக்கும் உதவும் விளைச்சலுக்குப் பாய்ச்சுவதுதான் அறம். (நல்லாறு - திருக்குறள் 41)

மக்களோடு ஓடும் வாழ்க்கை ஓட்டத்தை ஒருவன் பிறருக்குத் துன்பம் இல்லாமல் தன்னை அறுத்துக்கொள்வதே (வையறுத்துக் கொள்வதே) அறம். 
இதனை நன்னெறி எனலாம். 
உதவியும், ஈகையும் நன்னெறியின் வெளிப்பாடு. 
உதவி என்பது உழைப்பை நல்குதல். 
ஈகை என்பது உடைமையை நல்குதல்.

இப்படி எண்ணிப் பார்த்து நன்னடத்தைதான் அறம் என உணர்ந்துகொள்ள வேண்டும். - சங்கைப் புவன்


 







0 comments:

Post a Comment

Kindly post a comment.