Friday, January 18, 2013

சென்னையில் தானம் பெறப்படும் உடல் உறுப்புக்கள் குப்பைக்குப் போகும் அவலம்… அதிர்ச்சி ரிப்போர்ட் ! - one india-18-01-2013


ஒவ்வொரு ஆண்டும் நோயாளிகளால் மொத்தம் 250 இதயங்கள் வரை பெறப்பட்டபோதும், உடனடி மருத்துவ வசதியின்மை, தொலைவு, நோயாளிகளின் ஒத்துழைப்பு இன்மை, தானம் தருபவர் சம்மதித்தும் உறவினர்களின் ஒத்துழைப்பின்மை போன்ற காரணங்களால் தானம் பெறப்பட்ட உடல் உறுப்புகளும் குப்பைக்கு செல்லும் அவல நிலை தொடர்கிறது.
கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட புள்ளி விவரங்களின்படி தமிழகத்தில் மொத்தம் 306 பேர் உடல் உறுப்பு தானம் செய்துள்ளனர். மொத்தம் 1741 உறுப்புகள் பெறப்பட்டுள்ளன. இதில் இதயம்,52, நுரையீரல் ,13, கல்லீரல், 280, சிறுநீரகம், 563, இதய வால்வு, 350, கண்விழி, 482 மற்றும் ஒரு உடல்தானம் என்று தானங்கள் பெறப்பட்டுள்ளன. தேவையான இந்த உறுப்புகளைக் குறிப்பிட்ட நேரத்தில் மற்றொரு நோயாளிக்குப் பொருத்தினால்தான் அவை பயனளிக்கும்.
இந்தியாவைப் பொறுத்தவரை ஹைதராபாத், டெல்லி, பெங்களூர், கொச்சி, விசாகப்பட்டினம் போன்ற நகரங்களில் இதய மாற்று அறுவைச் சிகிச்சைக்கான வசதிகள் உள்ளன. சென்னையைப் பொறுத்தவரை, தானமாகப் பெறப்படும் இதயங்களில் 17 சதவீதம் மட்டுமே மாற்றப்பட்டு, மற்றவர்களுக்குப் பொருத்தப்படுகிறது. மற்ற இதயங்கள் மருத்துவக் கழிவுகளாக வீசப்படுகின்றன என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.
 
 
இதய மாற்று அறுவை சிகிச்சையைப் பொறுத்தவரை மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சையாகும். நோயாளிகளின் ஒத்துழைப்பு, கட்டணம், போக்குவரத்து, தானம் அளிப்பவரின் உடல் அறுவை சிகிச்சைக்கு ஒத்துழைக்கிறதா, பெறுபவரின் உடல் அறுவை சிகிச்சைக்கு ஒத்துழைக்கிறதா, இரு தரப்பு உறவினர்கள் ஒத்துழைப்பு, மருத்துவ வசதிகள் போன்றவைதான் இதய அறுவை சிகிச்சையைத் தீர்மானிக்கும்.
பெரும்பாலும் சென்னையில் இதய பைபாஸ் மட்டுமே அதிகளவில் செய்யப்படுகிறது. சென்னையில் உள்ள சில தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இதற்கு நிமிடம் கூட முக்கியமானது. சில உறுப்புகளைப் போல இதயத்தை வெகு நேரத்துக்கு வைத்திருந்து மாற்ற இயலாது. குறிப்பிட்ட மணித்துளிகளில் செய்ய வேண்டும். இல்லையேல் அது  மருத்துவக் கழிவுதான் என்கின்றனர் மருத்துவர்கள்.
 
 சென்னையில் தானம் பெறப்படும் உடல் உறுப்புக்கள் குப்பைக்கு போகும் அவலம்… அதிர்ச்சி ரிப்போர்ட் !

சென்னை மருத்துவமனைகளில் தானமாகப் பெறப்படும் இதயம் உள்ளிட்ட உடல் உறுப்புகள் உரியவர்களுக்குப் பொருத்தப்படாமல் கழிவுகளாகக் குப்பையில் வீசப்படுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. 
 
ஆண்டுதோறும் 250 இதயங்கள் வரை பெறப்பட்டபோதும், உடனடி மருத்துவ வசதியின்மை, தொலைவு, நோயாளிகளின் ஒத்துழைப்பு இன்மை, தானம் தருபவர் சம்மதித்தும் உறவினர்களின் ஒத்துழைப்பின்மை போன்ற காரணங்களால் இந்த இதயங்கள் வீணாகிப் போகின்றனவாம். 
 
இதயநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றலாம் என்ற அளவிற்கு மருத்துவம் வளர்ந்துள்ளது. 
 
தற்போது உடல் உறுப்புதானம் பற்றி விழிப்புணர்வு அதிகரித்துள்ளதால் மூளைச் சாவு ஏற்பட்ட பலரின் உறுப்புகள் தானம் செய்யப்படுகின்றன. அவ்வாறு தானமாகப் பெறப்படும் உறுப்புகள்தான் சில நாட்களில் பயன்படுத்தப்படாமல் கழிவாக வீசப்படுகிறதாம்.

: http://tamil.oneindia.in/news/2013/01/18/tamilnadu-hearts-go-waste-as-many-die-cardiac-disease-168142.html#slide47074
 
 நன்றி :- ஒன் இந்தியா
 
 

0 comments:

Post a Comment

Kindly post a comment.