Sunday, January 13, 2013

இதழியல் பணியில் புன்னகைக் குழுமம் !

இதழியல் சார்ந்த பல்வேறு ஆக்கப்பூர்வ பணிகளில் கடந்த 6 ஆண்டுகளாக புன்னகை குழுமம் ஈடுபட்டு வருகிறது. பயன்மிக்க மூன்று மாத இதழ்கள் வெளியீடு, நிறுவனங்களுக்கான ஆவணப் படங்கள் தயாரிப்பு மற்றும் ஊடகப் பயிற்சி மையம் நடத்துவது போன்ற பணிகளில் இக்குழுமம் ஈடுபட்டு வருகிறது.

கிட்ஸ் புன்னகை என்ற கல்வி மாத இதழ், சின்னஞ்சிறு செல்லக் குழந்தைகளுக்காக வெளியிடப்படுகிறது. வரைவது, வண்ணம் தீட்டுவது, வித்தியாசம் கண்டுபிடிப்பது, வழி கண்டுபிடிப்பது போன்ற பல்வேறு சுவையான அம்சங்களுடன் வெளிவரும் கிட்ஸ் புன்னகை இப்போது கிண்டர் கார்டன் முதல் ஐந்தாம் வகுப்பு வகை படிக்கும் பிஞ்சுகளின் மனதில் இடம்பிடித்து விட்டது.

ஜீனியஸ் புன்னகை என்ற கல்வி மாத இதழ், 10 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு உத்வேகம் தரும் தகவல்களுடன் வெளிவருகிறது. அறிவியல் அதிசயங்கள், வான்வெளி விந்தைகள், படிப்பு உத்திகள், சுயமுன்னேற்றக் கட்டுரைகள் போன்ற அம்சங்களுடன் வெளிவரும் ஜீனியஸ் புன்னகை, இளம் மாணவச் செல்வங்களுடன் அறிவு வேட்கையை உருவாக்கி வருகிறது.

புன்னகை உலகம் என்ற வாழ்வியல் மாத இதழ், தமிழ்நாட்டு மக்களுக்குப் பயன்தரும் பல்சுவை அம்சங்களுடன் வெளிவருகிறது. தடைகளைத் தாண்டி ஜெயித்தவர்களின் உண்மைக் கதைகள், பணத்தை நிர்வகிப்பது பற்றிய ஆலோசனைகள், பலதுறை நிபுணர்களின் வழிகாட்டுதல் தொடர்கள், தன்னம்பிக்கை கவிதை போன்ற அம்சங்களுடன், குடும்பங்கள் போற்றிப் பாதுக்காக்க வேண்டிய பொக்கிஷமாக, புன்னகை உலகம் வெளிவருகிறது.

கல்வி நிறுவனங்கள் மற்றும் கார்பரேட் நிறுவனங்களுக்குத் தேவையான ஆவணப் படங்கள், விளம்பரப் படங்கள், நிகழ்ச்சி ஏற்பாடுகள் போன்ற சேவைகளையும் புன்னகை குழுமம் செய்து தருகிறது.

அண்ணா பல்கலைக்கழகம், டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கும் இத்தகைய சேவைகளைப் புன்னகைக் குழுமம் செய்து தருகிறது.

பத்தாம் வகுப்பு அல்லது பன்னிரெண்டாம் வகுப்பு மட்டுமே படித்தவர்களும்கூட ஊடகத் துறையில் கெளரவமான வேலைவாய்ப்பைப் பெறும் வகையில் புன்னகை ஊடகப் பயிற்சி மையத்தைப் புன்னகைக் குழுமம் நடத்தி வருகிறது.

இதழியல் மற்றும் தொலைக்காட்சி தொடர்பான களப் பணிகளில் இக்குழுமம் ஈடுபட்டு வருவதால், இங்கு பட்டயப் படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு நேரடி கள அனுபவம் கிடைப்பதற்கு, வேலை வாய்ப்பும் எளிதில் கிடைத்துவிடுகிறது.

புன்னகை குழுமத்தைத் தொடங்கி வழி நடத்தி வரும் பத்திரிகையாளர்
 சுசி. திருஞானம் தனது இலக்காகக் கூறுவது இதுதான்,

’எல்லோர் வீடுகளிலும் புன்னகை பரவட்டும்.

www.punnagai.com.    

ன்றி :-ினி, 13-01-2003                                                                                                                       

0 comments:

Post a Comment

Kindly post a comment.