Friday, January 18, 2013

ஜப்பானில் வரலாற்றுச் சிறப்புமிக்க கோவில் தீயில் கருகியது !



ஜப்பானின் ஹோன்ஷூ தீவில் உள்ள நாகனோ மலையில் உள்ளது டோகுமாஞ்சி கோவில். இந்த கோவில் 1755-ம் ஆண்டு முற்றிலும் மரத்தால் உருவாக்கப்பட்டது. கோவில் அமைந்துள்ள பகுதி 13-ம் நூற்றாண்டில் இருந்து மக்கள் வழிபாட்டிற்குரிய புண்ணியத் தலமாக விளங்கி வருகிறது.

இந்நிலையில், கோவிலின் தலைமைக் குரு தங்கியிருக்கும் வீட்டில் நேற்று இரவு தீப்பிடித்தது. பின்னர் அந்தத் தீ மளமளவெனப் பரவி, கோவிலின் பிரதான அறை பற்றி எரிந்தது. பழங்காலத்து மரப்பலகைகள் என்பதால் விரைவில் எரிந்து முற்றிலும் அழிந்துபோனது.

இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும், மிகப்பெரிய பொக்கிஷத்தை இழந்துவிட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

‘ஜப்பானில் 1847-ம் ஆண்டு மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டபோது, சிதையாமல் தப்பிய சில கட்டிடங்களில் இந்தக் கோவிலும் ஒன்று. அத்தகைய விலைமதிப்பற்ற சொத்தை இழந்துவிட்டோம்’ என்று அப்பகுதி அருங்காட்சியக மேற்பார்வையாளர் கூறினார்.                                                               

நன்றி :- மாலைமலர், 18-01-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.