Wednesday, January 16, 2013

புற்றுநோய் சிகிச்சைக்கான மூலக்கூறு : இந்திய விஞ்ஞானி கண்டுபிடிப்பு !

இந்திய அறிவியல் நிறுவனம் ( பெங்களூரு ) டாக்டர் சதீஸ், சி.ராகவன் தலைமையிலான இந்திய விஞ்ஞானிகள் குழு, புற்றுநோயைக் குணப்படுத்தும் மூலக்கூறைக் கண்டுபிடித்துள்ளது. இந்த மூலக்கூறுக்கு விஞ்ஞானி சதீஷ் பெயரில் எஸ்சிஆர் 7 என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த மூலக் கூறு கண்டுபிடிப்பு குறித்த முழு விபரங்கள் சர்வதேச அறிவியல் இதழான “செல்”லில் வெளியிடப்பட்டுள்ளது.

புற்றுநோய்க்கு தற்போதுள்ள சிகிச்சைக்கு மேலும், மேம்பாட்டை அளிப்பதாக எஸ்சிஆர் 7 இருக்கும் என சதீஸ் தெரிவித்தார். இவர் இந்திய அறிவியல் நிறுவனத்தின் உதவிப் பேராசிரியராக உள்ளார். இந்தப்புதிய மூலக்கூறு மூலம் புதிய சந்ததி மருந்தைத் தயாரிக்க முடியும் என்றார். இந்த விஞ்ஞானி கேரளாவில் உள்ள கண்ணனூரைச் சேர்ந்தவர்.

மரபணுவான டி என் ஏ வி-ல் இரட்டை மெல்லிய இழை உடைதல்  ( டி.எஸ்.பி ) மரபணுவை மிகவும் சேதப்படுத்துவதாக இருந்தது. இத்தகைய டி.எஸ்.பி. மரபணுவில் நிச்சயமற்ற நிலையை ஏற்படுத்தும், அபாயமும் உள்ளது. தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள எஸ்சிஆர் மூலக் கூறு டி எஸ் பி சேத நிலையைச் சரி செய்து புற்றுநோய் சிகிச்சைக்கு மிகச் சிறந்த பலனை அளிக்கும்.

குணப்படுத்த முடியாத கட்டிகளிலும் எஸ்சிஆர் 7 மூலக்கூறு நல்ல பலன் அளிப்பதாக உள்ளது. இந்த மூலக்கூறு ஆய்வில் ஐபிஏபி ( பெங்களூரு ) , கேல் இ பார்மசி கல்லூரி ( பெங்களூரூ ) ஏசிடி ஆர்சி  ( மும்பை )  ஆகியவை ஈடுபட்டன.                                                                                                                                          

நன்றி :- தீக்கதிர், நாளிதழ், 16-01-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.