Sunday, January 13, 2013

அருமையான உணவுப் பொன்மொழிகள் -இயற்கைப்பிரியன், இரத்தினசக்திவேல்



விருதுநகரில் பிறந்தவர். B.E. பட்டப்படிப்பு முடித்து நெய்வேலியில் பணியாற்றியவர். அதுசமயம், இயற்கை உணவு, யோகப் பயிற்சிகள், கண் பாதுகாப்பு உத்திகளில் மிகுந்த ஆர்வம் ஏற்பட்டு, நெய்வேலி, அருப்புக்கோட்டை மற்றும் தமிழ்நாடு முழுவதிலும் நடக்கும் இயற்கை மருத்துவ முகாம்களில் பங்கேற்று வருகிறார். சென்னையில் ‘மலர்’ ’கண்’ ’யோகா’ மற்றும் இயற்கை உணவு பயிற்சி மையத்தையும், அருப்புக்கோட்டையில் ‘விஜய்’ மகளிர் கண், உணவு, யோகா மையத்தையும் நிறுவியுள்ளார். ALL INDIA NATURE CURE FEDERATION-ல் ஆயுட்கால உறுப்பினராகவும், தமிழ்நாடு இயற்கை மருத்துவச் சங்க செயற்குழு உறுப்பினராகாவும், மேலும் NIN, PUNE நிறுவனத்தில் ADVANCED NATURE CURE TRAINING -ஐயும் படித்து முடித்துள்ளார். கண் பாதுகாப்பு, நீரிழிவு, மூட்டு வலி, குடல் புண், ஆஸ்துமா மற்றும் இயற்கை உணவுகள் குறித்து 30 -க்கும் மேற்பட்ட நூல்களையும் எழுதியுள்ளார். இவர், ’மலர் பதிப்பகம்” என்னும் நிறுவனத்தைத் தொடங்கி அதன் மூலம் நூல்களை வெளியிட்டும் வருகின்றார். இவ்வாறாக, இயற்கை மருத்துவத்தில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் அரிய பணியை ஆற்றி வருகிறார். மேலும் தொழிற்சாலைகளில் கிரேன் போன்ற இயந்திரங்களுக்கு COMPLETE PERSON பணிகளையும், பங்கு வர்த்தகம், மற்றும் இய்ற்கை உணவு மையங்கள் நிறுவுவதிலும் உதவி வருகிறார்..

 இவர் எடுத்துக்கூறும் இயற்கையோடு இணைந்த பழமொழிகளில் சில.


1.   அன்னம் ஒடுங்கின் அஞ்சும் ஒடுங்கும்

2.   வெந்து கெட்டது முருங்கை - வேகாமல் கெட்டது அகத்தி.

3   அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சாகும்.

4.   குமரியைச் ( சோற்றுக் கற்றாளை ) குமரனாகலாம்.

5.   மாதுளை, தூதுவளை வளர்த்த வீடு, வயிற்றிலே நெஞ்சிலே களங்கம்

      இல்லை.

6.   திரிபலா தின்றால் துவரேறும் -கறிவேப்பிலை தின்றால் பசியேறும்.

7.   பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்.

8.   ஆவாரம் பூ பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ ?

9.   நஞ்சுக்கு நங்கை : நரம்புக்கு முருங்கை: இருமலுக்குத் தூதுவளை :

      அல்சருக்கு வெந்தயம் :

10.  வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆகும்.

11.  அஞ்சறைப் பெட்டின் வெந்தயத்தை அடுப்பிலே சமைப்பதால் யாருக்கும்

      லாபம் இல்லை.

Email : yahc2010@yahoo.in 

Phone is 9444315490 & 9003238340

”வள்ளலாரும் கனியமுதும்”

இயற்கைப்பிரியன் இரத்தினசக்திவேல்

மலர் பதிப்பகம், சென்னை.600 005.

பக்கம் 36. விலை ரூ.10.


2 comments:

  1. It is a blessing to meet iyarkai piriyan rathina saktivel and attend his naturopathy training in our lifetime to lead a good happy healthy life

    ReplyDelete
  2. It is a blessing to meet iyarkai piriyan rathina saktivel and attend his naturopathy training in our lifetime to lead a good happy healthy life

    ReplyDelete

Kindly post a comment.