Sunday, January 13, 2013

பென்னிகுவிக் நினைவு மணிமண்டபம்: ஜனவரி 15-ல் முதல்வர் திறந்து வைக்கிறார்

மணிமண்டப முகப்புத் தோற்றம் முல்லைப் பெரியாறு அணையை உருவாக்கிய பொறியாளர் பென்னிகுவிக் நினைவாக லோயர் கேம்ப்பில் அமைக்கப்பட்டுள்ள நினைவு மண்டபத்தை முதல்வர் ஜெயலலிதா வரும் 15-ம் தேதி திறந்து வைக்கிறார். இதற்கான நிகழ்ச்சி தேனி மாவட்டம் லோயர் கேம்ப்பில் நடைபெற இருப்பதாக தமிழக அரசு சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணையை உருவாக்கிய பொறியாளர் பென்னிகுவிக்கின் பணியைப் பாராட்டும் வகையிலும், தமிழக மக்களின் சார்பில் நன்றியைத் தெரிவிக்கும் வகையிலும் அவருக்கு வெண்கல உருவச் சிலையுடன்கூடிய நினைவு மணிமண்டபம் நிறுவப்படும் என்று கடந்த ஆண்டு ஜனவரி 8-ம் தேதி முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். சரியாக ஓராண்டுக்குள் பணிகள் முடிக்கப்பட்டு இப்போது மணிமண்டபம் திறக்கப்பட உள்ளது. இந்த நினைவு மண்டபம் இயற்கைச் சூழல் நிறைந்த மலைப்பாங்கான இடத்தில் அனைவரும் கண்டுகளிக்கக் கூடிய வகையில் எழில்மிகு தோற்றத்தில் ரூ.1.25 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. நன்றி :- தினமணி, 13-01-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.