Thursday, January 3, 2013

44 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குளிரில் நடுங்கும் வட இந்தியா !


டெல்லி: கடந்த 44 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நேற்று டெல்லியில் உரைய வைக்கும் குளிராக இருந்தது. அதிகபட்ச வெட்பநிலை 9.8 டிகிரி செல்சியஸாகக் குறைந்தது.

வட மாநிலங்களில் கடுங்குளிர் நிலவி வருகிறது. அதிலும் தலைநகர் டெல்லியில் எலும்பை உருக்கும் அளவுக்குக் குளிராக உள்ளது. இந்நிலையில் கடந்த 44 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நேற்று டெல்லியில் கடுங்குளிராக இருந்தது.

அதிகபட்ச வெட்பநிலை 9.8 டிகிரி செல்சியஸாக இருந்தது. இது வழக்கத்தை விட 11 டிகிரி குறைவாகும். மேலும் குறைந்தபட்ச வெட்பநிலை 4.8 டிகிரியாக இருந்தது. காலை நேரத்தில் பனிமூட்டமாக உள்ளது. சில நேரங்களில் தான் சூரியன் வந்து செல்கிறது.

மக்கள் தங்களை குளிரில் காத்துக் கொள்ள தொப்பி, மப்ளர், ஸ்வெட்டர், நீளமான கோட் ஆகியவை அணிந்து வெளியே செல்கின்றனர். டெல்லி தவிர காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ஹரியானாவிலும் குளிரும், பனியுமாக உள்ளது. இது இன்னும் இரண்டு நாட்களுக்கு நீடிக்கும் என்று கூறப்படுகிறது.

காஷ்மீர் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் நேற்று பூஜ்ஜியத்திற்கும் குறைவாக வெட்பநிலை இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று கார்கிலில் வெட்பநிலை மைனஸ் 14.8 டிகிரி செல்சியஸாகவும், லே பகுதியில் மைனஸ் 16.2 டிகிரி செல்சியாஸகவும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி :-: http://tamil.oneindia.in/news/2013/01/03/india-north-india-freezes-delhi-coldest-167293.html

0 comments:

Post a Comment

Kindly post a comment.