Saturday, January 19, 2013

சிறைவாசத்தில் 31 பட்டங்கள் பெற்ற கைதி!

குஜராத் பல்கலைக் கழகம்

சிறை… குற்றவாளிகளை மனிதர்களாக மாற்றுவதற்கான இடம். அப்படி  மாற்றப்படுகிறார்களா? இல்லையா? என்பது தொன்றுதொட்டுத் தொடரும் விவாதப்  பொருள்.

ஆனால், தனது சிறைவாசத்தைக் கல்வி பயில்வதற்கான வாய்ப்பாகப் பயன்படுத்திக்  கொண்ட குஜராத்தைச் சேர்ந்த 57 வயது பானு படேல் என்பவர், சிறையில் இருந்தபடியே  படித்து 31 பட்டங்களைப் பெற்றிருக்கிறார்.

மருத்துவரான பானு படேல், அன்னியச் செலாவணி வழக்கில் 2004-ம் ஆண்டு  குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அவர் 2005 முதல் 2011 வரை சிறையில் இருந்தார்.  இந்தக் காலக்கட்டத்தில் திறந்தவெளிப் பல்கலைக்கழகங்கள் மூலமாக கல்வியைத்  தொடர்ந்தவர் எம்.எஸ்சி, எம்.காம், பி.காம், முதுகலைப் பட்டயப் படிப்புகள் என 31  பட்டங்களை வாங்கி குவித்தார்.

இதன்மூலம் சிறையில் இருந்தபடி மிகுதியான கல்வியைக் கற்றவர் என்ற சாதனையை  அவர் நிகழ்த்தினார். ‘யுனிக் வேர்ல்ட் ரெக்கார்டு’ மற்றும் ‘ஏசியா புக் ஆஃப் ரெக்கார்டு’  ஆகியவற்றில் இருந்து சாதனைச் சான்றிதழ்களைப் பெற்றிருக்கிறார்.

தற்போது குஜராத்தில் உள்ள 26 சிறைகளில் உள்ள டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்  திறந்தவெளிப் பல்கலைக்கழத்தின் கல்வி மையங்கள் மூலம் கல்வி அளிக்கும்  திட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளராக இருக்கும் படேல், விரைவில் அந்தப்  பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகவுள்ளார்.

"என்னுடைய கல்வித் தகுதியின் காரணமாக, சிறையில் லைப்ரரி உள்ளிட்ட இடங்களில்  எனக்குப் பொறுப்புகள் வழங்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, திறந்தவெளிப்  பல்கலைக்கழங்களில் படிப்பதற்கான வாய்ப்பைப் பெற்றேன்" என்கிறார் படேல்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.