Monday, January 21, 2013

செவ்வாய்க் கிரகத்தில் 1,500 கி.மீ நீள வறண்ட நதி கண்டுபிடிப்பு ! !


செவ்வாய்க் கிரகத்தில் 1,500 கிலோமீட்டர் நீளமான வறண்ட நதி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் செவ்வாய்க் கிரகத்துக்கு அனுப்பிய மார்ஸ் எக்ஸ்பிரஸ் சேட்டிலைட் என்ற செயற்கைக் கோள் இந்த நதியைப் படம் பிடித்துள்ளது. கிட்டத்தட்ட 6 கி.மீ அகலம் கொண்ட இந்த நதியின் சில பகுதிகள் 1 கி.மீ. அளவுக்கு ஆழமாக உள்ளன.

இதற்குப் பல கிளை நதிகளும் உள்ளன. 1.8 பில்லியன் ஆண்டு முதல் 3.5 பில்லியன் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் இந்த நதி ஓடியிருக்க வேண்டும் என்று தெரியவந்துள்ளது. இந்த நதிக்கு 'Reull Vallis' என்று பெயர் சூட்டியுள்ளது ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம்.

இப்போது இந்தக் கிரகத்தில் தரையிறங்கி ஆய்வு மேற்கொண்டு வரும் அமெரிக்காவின் நாஸா விண்வெளி அமைப்பு அனுப்பிய க்யூரியாசிட்டி ரோவர் என்ற விண்கலமும் அது தரையிறங்கிய கேல் கிரேட்டர் என்ற இடத்துக்கு அருகே ஒரு பழமையான கால்வாய் போன்ற பகுதியை அடையாளம் கண்டதும் குறிப்பிடத்தக்கது.

இதனால் இந்தக் கிரகத்தில் ஒரு காலத்தில் நீரோ அல்லது ஏதோ ஒரு திரவமோ இருந்துள்ளதும், அது ஆறாக ஓடியதும்நிரூபணமாகியுள்ளது.                                   
                                  

நன்றி :- ஒன் இந்தியா, 21-01-2013


0 comments:

Post a Comment

Kindly post a comment.