Monday, December 31, 2012

அறிவியலுக்கும் அப்பாற்பட்ட சிருஷ்டியின் இரகசியங்கள் ! ennar.blogspot.com

My Photo
Name:
Location: திருச்சி, தமிழ் நாடு, India
ஆசைக்கோர் அளவில்லை அகிலமெல்லாம் கட்டி ஆளினும் கடல்மீதிலே ஆணை செலவே நினைவர் 

கைத்தொலைபேசி எண்: 9865531171

http://ennar.blogspot.in/2006/09/blog-post_19.html

பூத்துக் காய்ப்பது ஒரு வகை; பூக்காமல் காய்க்கும் மரங்கள் பலாமரம், அரசமரம், இத்தி, அத்தி போன்றவைகள் பூக்காமலே காய்க்கின்றன. எதையும் செய்ய ஒரு சக்தியுண்டு என்பதை மாய்கை காட்டுகின்றது. 

எல்லா பாம்பினங்களும் முட்டையிட்டுக் குஞ்சு பொறிப்பது ஒழுங்கு. ஆனால் விரியன் பாம்போதன் சரீரத்தையே இழந்து குட்டிகளை உற்பத்தி செய்கின்றது. 

பறவைகள் முட்டையிட்டுக் குஞ்சு பொறிக்கின்றன. ஆனால் வெளவாலோ குட்டி போட்டு பால் கொடுக்கின்றது. இது வெல்லாம் சிருஷ்டியின் வேடிக்கைகள். 

வெள்ளையானை, வெண்காக்கை, வெள்ளை மயில் இப்படி இயற்கைக்கு ஒரு சட்டமுண்டுவிளங்கினங்களுக்கு 

இரண்டு கண் சிவனுக்கு முக்கண், நான்முகன் ஆறுமுகம். ஏன் இருக்கக்கூடாது என்பது போல. 

நீரில் வாழும் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கின்றன. ஆனால் சுரா, திமிங்கலமோ கடளுக்குள்ளேயே குட்டிபோட்டு பால் கொடுத்துவளர்க்கிறது. ஆமையோ கரையில் வந்து முட்டையிட்டு நினைத்த மாத்திரத்தில் அவையனைத்தும் குஞ்சாக ஓடிவந்து தண்ணீரில் இறங்குகிறது. முதலையும் இப்படித்தான் என நினைக்கிறேன். 

இன்னும் ஒரு அதிசயம் என்னவென்றால் சக்கரவாகம் என்ற ஒரு பறவை ஆகாயத்திலேயே பறந்து சஞ்சரிக்கின்றது. அது ஆகாயத்திலேயே முட்டையிடுகின்றது. அந்த முட்டை கீழ்நோக்கி வருகிறபோதே வரும் வேகத்தில் கரு முதிர்ந்து வெடித்து அதிலுள்ள குஞ்சு வெளிவந்து மேல்நேக்கிப் பறக்கிறது. அதைத் தாய்ப்பறவை கூட்டிச் செல்லுகின்றது. அவை பூமியைப் பார்த்ததே இல்லை. தொட்டதுமில்லை நிலவு ஒளியை உண்டு வாழ்வதாக சொல்வார்கள். சிருஷ்டியின் அதிசயம் பார்த்தீர்களா?

அடுத்து தான் பெற்ற பிளையையே காணாத தாய். பெண் பிள்ளை என்றால் தாயைக் காணமலே நெல் மணி எருக்கம் பால் ஊற்றிக் கொல்கிறார்கள்

ஆனால், தான் பெற்ற பிள்ளையைப் பார்க்காமல் இறக்கும் தாய் விரியன் பாம்பு, நண்டு, கிளிஞ்சல் போன்றவை.

நண்டுசிப்பி வேய்கதலி நாசமுறுங் காலத்தில்

கொண்ட கருவளிக்கும் கொள்கைபோல் -(ஒளவையார்)

இவைகள் எல்லாம் சிருஷ்டியிலுள்ள பல ரகசியங்கள். 

இன்னும் சொல்லாததும் சாதாரண மனிதனுக்குத் தெரியாததும், ஏகதேசமாகத் தெரிவதும் தேவகணம் அசுரகணம், பைசாசகணம் என்று சொல்லப்படுகிற மிருதுவான தெய்வீக தேவதூத வடிவங்களும், முரட்டுத்தனமான பெருங்காரியங்களைச் சாதிக்கத்தக்க முரட்டுக் கூறுகளும், பிறரைத் துன்புறுத்துதல் பயமுறுத்துதல் என்ற பிசாசுக் கூறுகளும் ஆகும், 

இவை பூலோக சிருஷ்டி சூரிய மண்டலம், சந்திரமண்டலம், கிரகமண்டலம், நட்சத்திர மண்டலம் இவைகளிலுள்ள வசிப்புகள் பல. 

சிருஷ்டிகள் பல திறப்பட்டவை. இவைகளை விஞ்ஞானம் காண முயற்சிக்கிறது. 

ஒரு பொழுதும் காண மாட்டாது. இவை யோகியும் ஞானியும் மட்டுமே காணமுடிந்தவை. அது விஞ்ஞானத்தாலல்ல; அதற்கப்பாற்பட்ட மெஞ்ஞானத்தால். 

0 comments:

Post a Comment

Kindly post a comment.