Saturday, November 24, 2012

காற்றழுத்தத் தாழ்வு நிலை நீடிப்பு: இன்று கனமழை பெய்யும் !

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக இன்று தமிழகத்தின் பல இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை ஆராய்ச்சி மைய இயக்குநர் ரமணன் கூறியது:

சில நாள்களுக்கு முன்பு வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவிழந்தது. வெள்ளிக்கிழமையன்று வட தமிழ்நாடு மற்றும் தென் ஆந்திர கடலோர பகுதியில் அந்த தாழ்வு மண்டலம், காற்றழுத்தத் தாழ்வாக நிலைகொண்டுள்ளது

அந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை, அதே பகுதியில் நீடிப்பதால் சனிக்கிழமை தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மாநிலத்தின் பல இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்றார் அவர்.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி வரையில் பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்):

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு - 60; திருவாலங்காடு - 40; காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம், உத்தரமேரூர், கல்பாக்கம், வேலூர் மாவட்டம் அரக்கோணம், மேலாலத்தூர், திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை - 30; வேலூர், பாம்பன், செங்கல்பட்டு - 20.                                                                               

நன்றி:- தினமணி, 24-11-2012


0 comments:

Post a Comment

Kindly post a comment.