Sunday, November 25, 2012

விதவிதமான இயற்கை உணவுகள் !


• அவலில் சிறிது தண்ணீர் தெளித்து நனைத்து அதில் சிறிளவு மிளகுத்தூள் சேர்த்து, தேங்காய் துருவலையும் சேர்த்து வேக வைத்தால்  கார உணவு தயார்.

• அவலை நனைத்து அதில் தேங்காய்ப்பூ, சர்க்கரை, ஏலக்காய்த் தூள் ஆகியவற்றைச் சேர்த்து வேக வைத்தால் இனிப்பு உணவு தயார்.

• அவலை நொறுக்கித் தண்ணீரில் கலந்து, சர்க்கரை, தேங்காய்ப்பால், முந்திரிப்பருப்பு, ஏலக்காய்த்தூள் ஆகியவற்றைச் சேர்த்து அவல் பாயசம் செய்யலாம்.

• அவலை நொறுக்கி, தயிர், வெங்காயம், மல்லி இலை, சிறிது இஞ்சி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய்ச் சேர்த்து  வேக வைத்தால் தயிர்ச் சாதம் தயார்.

• கேரட்டைத் துருவி, அதில், மிளகாய், சீரகத்தூள், வெங்காயம், கறிவேப்பிலை, மல்லி இலை, தேங்காய்த் துருவல் ஆகியவற்றைச் சேர்த்தால் கேரட் பொரியல் ரெடி.

• பச்சைப்பூசணி (அ)கேரட்டை பொடிதாக்கி அதில் தயிர், சீரகத்தூள், வெங்காயம், மல்லி, கறிவேப்பிலை சேர்த்தால் பச்சாடி தயார் ஆகிவிடும்.

• கேரட், சௌசௌ, தடியங்காய், உருளைக்கிழங்கு ஆகியவற்றை அரிந்து சேர்த்து வைத்துக் கொண்டு பச்சை மிளகாய், தேங்காய், கறிவேப்பிலை, சீரகம் ஆகியவற்றை அரைத்து தயிரும் சேர்த்துக் கிளறினால் அவியல் ரெடி..               


நன்றி :- தினமணி, 17-11-2012




   

0 comments:

Post a Comment

Kindly post a comment.