நமது உணவுப் பழக்க வழக்கத்தால் ஏற்படும் நோய்களில் முதன்மையானதாக விளங்குவது நீரிழிவு நோயாகும். இது அனைவரும் அறிந்ததே.
ஆனால், தற்போது இந்தியாவில் 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் நீரிழிவு நோய் ஏற்படுகிறது என்பதே அதிர்ச்சியூட்டும் செய்தியாகும்.
கோயம்பத்தூரில், 12ம் வகுப்பு மாணவிக்கு நீரிழிவு நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கோவை மாவட்ட மருத்துவர்கள் கூறுவது என்னவென்றால், இந்த மாணவி மட்டுமல்ல, கோவையில் ஏராளமான குழந்தைகளுக்கு நீரிழிவு ஏற்பட்டு வருகிறது.
குறிப்பாக உணவுகளை அதிகம் உண்ணாமல், குளிர்பானங்களை அதிகமாக அருந்தும் குழந்தைகளுக்குத்தான் நீரிழிவு நோய் எளிதில் ஏற்படுகிறது என்று கூறுகின்றனர்.
ஒன்றரை வயதுச் சிறுவனுக்குக் கூட நீரிழிவு நோய் இருப்பது உறுதி செகய்யப்பட்டுள்ளதாகக் கூறும், கோயம்பத்தூர் நீரிழிவு அறக்கட்டளையின் மூத்த மருத்துவர் வி. சேகர், ஒவ்வொரு மாதமும் 10 முதல் 15 குழந்தைகளுக்கு நீரிழிவு இருப்பது உறுதி செய்யப்படுவதாகக் கூறியுள்ளார்.
அந்த ஒன்றரை வயது குழந்தைக்கு அவனது பெற்றோர் எப்போதும் குளிர்பானங்களை அதிகமாகக் கொடுத்திருப்பது தெரிய வந்துள்ளதாகவும் கூறுகிறார்.
முறையான உணவும், தினமும் செய்யும் உடடற்பயிற்சியும் நீரிழிவில் இருந்து காக்க உதவும்.
நன்றி :- தினமணி, 16-11-2012
Sunday, November 25, 2012
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
Kindly post a comment.