Thursday, November 29, 2012

பலாப்பழத்தை அறுக்காமல் எத்தனை சுளைகள் இருக்கின்றன என்று கூறமுடியுமா ?



நமது பழந்தமிழ் கணித  நூலான கணக்கதிகாரத்தில் பாடல் ஒன்று  நமக்கு விடை கூறும் .
பலாவின் சுளையறிய வேண்டுதிரேல் ஆங்கு
சிறுமுள்ளுக் காம்பருக் கெண்ணிவருவதை
ஆறிற் பெருக்கியே ஐந்தினுக் கீந்திடவே
வேறெண்ண வேண்டாஞ் சுளை 
பலாப்பழத்தின்  உள்ள சிறு முட்களை எண்ணி அதை 6 ஆல் பெருக்கி வரும் விடையை 5 ஆல் வகுக்க கிடைக்கும்  ஈவே (quotient) பலாப்பழத்தினுள் உள்ள சுளையாகும் .

பலாப்பழத்தில் உள்ள  சிறு முட்களின் எண்ணிக்கை 1000 எனக்கொண்டால் 1000  6 ஆல் பெருக்க வேண்டும் கிடைக்கும் விடை 6000 ஆகும் .இந்த விடையை  5  ஆல் வகுக்க கிடைப்பது  1200 ஆகும் எனவே  பலாப்பழத்தினுள் உள்ள சுளைகள்  1200  ஆகும்.
 
டிஸ்கி -1 

ஒரு நிமிஷம் கணவன்மார்கள் கவனிங்க பாஸ் . இதை உங்க மனைவி கூட பலாப்பழம் வாங்கும் போது யூஸ் பண்ணுங்க 

உங்க  ரேஞ்சே வேறதான்  . இதை ஏற்கனவே  முயற்சித்த  நண்பர்  “ இது மாதிரி  வேற ஐட்டம்  இருக்காப்பா  மனைவியை இம்ப்ரெஸ் பண்ண 

அப்படின்னு நச்சரிக்க ஆரம்பிச்சுட்டார்  எனவே  நீங்க தாராளமா முயற்சிக்கலாம். 


மேலே உள்ள பாடலுக்குச் சரியான பொருளைப் புரிந்து கொள்ள முடியாத நிலையில், தோழியர் சுபா அல்லது ராஜம் சரியான பொருளைத் தருவார்கள் என்ற நம்பிக்கையுடனேதான் இந்தப் பதிவு.

0 comments:

Post a Comment

Kindly post a comment.