Monday, November 19, 2012

உடல் நலம் பேணிட இந்தியர்கள் அதிகமாகப் பயன்படுத்தும் எட்டு வகைக் காய்கள் !

1. கோவைக்காய் :-

இந்த வகையான காய் பூசணி வகையைச் சேர்ந்தது. இது இந்தியாவிற்கு வெளியே சாகுபடி அரிதாகச் சாகுபடி செய்யப்படுகிறது. இதற்கு எந்த ஒரு சரியான ஆங்கிலப் பெயரும் இல்லை. இதில் கலோரி குறைவாக உள்ளது. மேலும் இது உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது.


2.முருங்கைக்காய்

முருங்கைக்காய் குழந்தைகளுக்கும், கர்ப்பிணிகளுக்கும் மிகவும் நல்லது. ஏனெனில் இது எலும்புகளை வலுவாக்கும். அதிலும் இது மார்பகத்தில் ஏற்படும் நெரிசல் மற்றும் சுவாசக் கோளாறு போன்றவை ஏற்படாமல் பாதுகாக்கும்.

3.வெந்தயக் கீரை

வெந்தயக் கீரையைச் சாப்பிட்டால், சிறுநீரகங்கள் சுத்தமாகும். அதிலும் இதனை நீரிழிவு நோயாளிகள் அதிகம் சாப்பிட்டால், உடலில் சுரக்கும் இன்சுலின் அளவைக் கட்டுப்படுத்தும்


4.பாகற்காய்

இந்திய உணவுகளில் பாகற்காய் பல வகைகளில் சமைக்கப்படுகிறது. பாகற்காயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகமான அளவில் உள்ளன. இதனால் உடலில் இருக்கும் டாக்ஸின்கள் வெளியேறிவிடும். மேலும் இது கசப்புச் சுவையில் இருப்பதால், இதனை நீரிழிவு நோயாளிகள் சாப்பிட்டால் மிகவும் நல்லது.

5.கடுகுக் கீரை

கடுகுக் கீரையில் வைட்டமின் கே என்னும் சத்து மற்றக் கீரைகளை விட அதிக அளவில் உள்ளது.

6.வாழைப்பூ மற்றும் தண்டு
சிறுநீரகக் கல் இருப்பவர்கள், வாழைப்பூ மற்றும் தண்டை வேக வைத்து சாப்பிட்டால் சரியாகும். அதிலும் இதில் நார்ச்சத்து மற்றும் இரும்புச்சத்து அதிகமாகவும், கலோரி குறைவாகவும் உள்ளது.

7.பலாப்பழம்

இந்தியாவில் இருக்கும் பழத்தில் மிகுந்த சுவையுடைய பலாப்பழத்தை அப்படியே சாப்பிடலாம். சிலர் இதன் காயைச் சமைத்து சாப்பிடுவர். பலாப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இது இரத்த அழுத்தத்தைக் குறைக்கும். மேலும் இதனை தைராய்டு பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிட்டால், உடலில் சுரக்கும் தைராய்டு ஹார்மோன் கட்டுப்படும்


8.சுரைக்காய்
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சுரைக்காயை காலையில் எழுந்ததும் ஜூஸ் போட்டு குடித்தால், இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு கட்டுப்படும்.                                                                                                                             

இந்தத் தகவலைப் படத்துடன் பார்த்திட விரும்புவோர் one india செல்க.

நன்றி :- ஒன் இந்தியா, 19-11-2012




0 comments:

Post a Comment

Kindly post a comment.