அதற்குப் பதிலாக, அது, திருமணம் செய்து கொள்கிற இரண்டு குடும்பத்தினரை மட்டும் அல்ல, ஒட்டுமொத்த சமூகத்தினரையும் அதில் சம்பந்தப்படுத்தும் விஷயமாகவும் அமைந்துவிடு கிறது. எனவே, பெற்றோரின் சம்மதமின்றி நடைபெறும் சாதி களுக்கு இடையிலான கலப்புத் திருமணம் என்பது, கிராமப்புற இந்தியாவில் வன்முறையைத் தூண்டுவதற்கு வலுவானதோர் காரணியாக அமைந்துவிடுகிறது.
ஏணிப்படிகள் போன்று அமைந்துள்ள சாதிய சமூக அமைப்பில் மேல்படியில் இருக்கும் சாதியைச் சேர்ந்தவருடன் கீழ்ப்படியில் இருக்கும் சாதியைச் சேர்ந்தவர் திருமணம் செய்துகொள்ளும் சமயத்தில், குறிப்பாக அதில் ஒரு சாதி தலித்தாக இருந்துவிடும் சமயத்தில், அத்தகைய திருமணங்களை மேல்சாதியினர் சமூக அவமரியாதையாகவே கருதுகின்றனர்.
தமிழ்நாட்டில், தருமபுரி மாவட் டத்தில், மூன்று தலித் குடியிருப்பு கள் மீது புதனன்று நடைபெற்றுள்ள தாக்குதலும், அதன் தொடர்ச்சியாக 268 வீடுகள் தீக்கிரையாக்கப்பட் டிருப்பதும், எந்த அளவுக்கு சாதி அடையாளங்கள் பெரும் அள விலான வகையில் வன்முறையைத் தூண்டிவிடுகின்றன என்பதை எடுத்துக்காட்டும் மற்றொரு அதிர்ச்சியளிக்கும் சம்பவமாக விளங்குகிறது.
இந்தத் தலித் குடியிருப்பைச் சேர்ந்த ஒருவரை, ஏணிப்படி போன்ற சாதி அடுக்கில் அதைவிட ஒரு படி மேலேயுள்ள சாதியைச் சேர்ந்த பெண் திருமணம் செய்து கொண்டதை அடுத்து, அந்தப் பெண்ணின் தந்தை தற்கொலை செய்துகொண்டதை அடுத்தே இந்தத் தீ வைப்புச் சம்பவம்
நடந்திருக்கிறது.
ஒரு தலித் இளைஞரைத் திருமணம் செய்வது என்கிற தம் மகளின் முடிவை ஏற்றுக் கொள்ள மனம் இடமளிக்காத நிலையில் அவர் தம் உயிரை
மாய்த்துக்கொள்வது என்று தீர்மானித்திருக்கிறார். மணப் பெண்ணின் குடும்பத்தைப் பொறுத்தவரை, குறிப்பாக ஏணிப்படி வரிசையில் அவர்கள் ஒருபடி மேலே இருந்துவிட்டால், வெவ்வேறு சாதிகளுக்கு இடையிலான இத்தகைய கலப்புத் திருமணத்தால் சமூகத்தில் உண் டாகும் அவப்பெயர் மிக மோசமானதாகவே இருக்கிறது.
‘‘குடும்ப கவுரவத்தை’’க்காக்கும் பெரும் பொறுப்புக் கொண்டவர்களாகப் பெண்கள் விளங்குகின்றனர். குடும்பத்தின் மீது ஆண் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படும் சமூக அந்தஸ்து போன்ற நிலப்பிரபுத்துவக் கருத்துக்களின் மறு பெயராகவே இந்தக் ‘‘குடும்பக் கவுரவம்’’ அமைகிறது. உண்மையில், இதுபோன்ற கருத்துக்கள் தொடர்ந்து நீடிப்பது என்பது, இந்தச் சமூகப் பிரிவுகளிலுள்ள பெண்களுக்கு இரண்டாம்பட்சமான அந்தஸ்தே அளிக்கப்படு கிறது என்பதற்கான ஓர் அடையாள அறிகுறியேயாகும்.
இங்கே நமக்கு மிகவும் சங்கடத்தை அளிக்கக்கூடிய விஷயம் என்னவெனில், தமிழகத்தின் கிராமப்புறங்களில் திருமணங்களின் விளைவாகவோ, மதரீதியிலான சடங்குகளின் காரணமாகவோ அல்லது பொது வளங்களைப் பயன்படுத்துவதன் காரணமாகவோ சாதி மோதல்கள் ஏற்படுவது அடிக்கடி நடைபெறும் சம்பவங்களாக இருந்த போதிலும், மோதல்கள் நடை பெறும் அத்தகைய சம்பவங்களின் போது காவல்துறையினர் நடவடிக்கை என்பது நத்தை வேகத்திலேயே அமைந்துள்ளன.
வன்முறைச் சம்பவம் நடைபெறுவதற்கு ஒருசில நாட்களுக்கு முன்புதான், புதிதாகத் திருமணம் செய்து கொண்ட தம்பதி, காவல் துறையினரை அணுகி, மணமகளின் வீட்டார் தங்களைத் தாக்கக்கூடும் எனத் தாங்கள் அஞ்சுவதாகவும், எனவே தங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.
ஆனால் காவல் துறையினர் அவர்களுக்கு வாயளவில் வாக்குறுதிகள் அளித்ததைத் தவிர, அவர்களைப் பாதுகாப்பதற்குரிய தடுப்பு நடவடிக்கைகள் எதையும் எடுத்ததாகத் தெரியவில்லை.
அதுமட்டுமல்ல, கிராமத்தில் இயங்குவதாகக் கூறிக் கொண்டு கிராம நீதிமன்றம் ஒன்று, திருமணம் செய்து கொண்ட தலித் கணவனிடம் அவனது மனைவியை மீண்டும் அவரது பெற்றோர் வீட்டிற்கேத் திருப்பி அனுப்பி விடும்படி கட்டளையிட்டிருக்கிறது. ஆனால் அந்தப் பெண் தன் கணவரை விட்டுச் செல்ல முடியாது என்று மறுத்துவிட்டார்.
இந்தச் சமயத்திலாவது காவல்துறையினர் இனிமேலாவது தொந்தரவுகள் வரக்கூடும் என்பதை ஊகித்தறிந்து விழித்துக் கொண்டிருந்திருக்க வேண்டும். தலித் சமூகத் தினர் மீது தாக்குதலுக்குக் காரணமாக இருந்த சம்பவமான, பெண்ணின் தந்தை தற்கொலை செய்து கொண்டபோதுகூட, பதற்றம் ஏற்படும் என்பதை ஊகித்து, வன் முறைச் சம்பவங்களைத் தடுத்திட, காவல்துறையினர் போதுமான காலஅவகாசம் இருந்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ள வில்லை.
தலித் மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறி பக்கத்துக் கிராமங்களில் அடைக்கலம் ஆகியிருந்ததால்தான், வன்முறைச் சம்பவம் நடைபெற்றபோது உயிரிழப்பு ஏதும் நிகழவில்லை. சமூகத் தில் காலங்காலமாக நிலவிவரும் பிற்போக்குச் சிந்தனைகளையும், சாதி வெறியையும், சாதி ஏற்றத்தாழ் வுகளையும் ஒரேநாளில் துடைத் தெறிந்துவிட முடியாதுதான்.
ஆயி னும், சட்டத்தை நிலைநாட்ட வேண்டியவர்கள் நடைபெற்றுவந்த நிகழ்வுகளை அறிந்தபின், சாதி வெறியர்களால் பதற்ற நிலைமை உருவாகும் என்பதை எதிர்பார்த்து, தடுப்பு நடவடிக்கைகளை நிச்சயமாக எடுத்திருக்க முடியும்.
நன்றி: ‘தி இந்து’ நாளேடு தலையங்கம், 10.11.12
மீள் பதிவு, தீக்கதிர், 13-11-2012
0 comments:
Post a Comment
Kindly post a comment.