1.விப்ரோ எம்.டி. அசீம் பிரேம்ஜி
ஐடி நிறுவனமான விப்ரோவின் சேர்மனும், எம்.டியுமான அசீம் பிரேம்ஜியின் சம்பளம் 2010-2011ம் நிதியாண்டில் ரூ.2.8 கோடியாக இருந்தது. ஆனால் கடந்த மார்ச் 31ம் தேதியோடு முடிவடைந்த நிதியாண்டில் அவரது சம்பளம் ரூ.1.9 கோடியாகக் குறைந்துள்ளது.
2.சிஸ்கோ சிஇஓ ஜான் சேம்பர்ஸ்
சிஸ்கோ நிறுவனத்தின் சிஇஓ ஜான் சேம்பர்ஸின் சம்பளம் 9 சதவீதம் குறைந்துள்ளது. 2011ம் ஆண்டில் 12.9 மில்லியன் டாலர் வாங்கிய அவரின் சம்பளம் தற்போது 11.7 மில்லியன் டாலராகக் குறைந்துள்ளது.
3.சோனி கார்ப் சிஇஓ கசுவோ ஹிராய்
சோனி கார்ப் நிறுவனத்தின் சிஇஓவான கசுவோ ஹிராயின் சம்பளம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 24 சதவீதம் குறைந்து 1.45 மில்லியன் டாலராகியுள்ளது.
4.இன்போசிஸ் சிஇஓ, எம்.டி. எஸ்.டி. ஷிபுலால்
கடந்த 2011ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில் 75,549 டாலர் சம்பளம் வாங்கியவர் இன்போசிஸ் சிஇஓவும், எம்.டி.யுமான எஸ்.டி. ஷிபுலால். ஆனால் கடந்த மார்ச் மாதத்துடன் முடிந்த நிதியாண்டில் அவரது சம்பளம் 70,007 டாலராகக் குறைந்துள்ளது. மேலும் அவரது போனஸ் தொகையும் குறைக்கப்பட்டுள்ளது.
5.இன்போசிஸ் எக்ஸிகியூட்டிவ் இணை-சேர்மன் எஸ். கோபாலகிருஷ்ணன்
கடந்த நிதியாண்டில் 76,561 டாலர் வாங்கிய இன்போசிஸ் எக்ஸிகியூட்டிவ் இணை-சேர்மன் எஸ். கோபாலகிருஷ்ணனின் இந்த ஆண்டு சம்பளம் 70,198 டாலர் மட்டுமே. அவரது போனஸ் தொகையும் குறைக்கப்பட்டுள்ளது.
சிஇஓவாக இருந்த கோபாலகிருஷ்ணன் எக்ஸிகியூட்டிவ் இணைச் சேர்மனாகப் பதவி உயர்வு பெற்றார்.
6 .மைக்ரோசாப்ட் சிஇஓ ஸ்டீவ் பால்மர்
மைக்ரோசாப்ட் சிஇஓ ஸ்டீவ் பால்மரின் சம்பளம் 685,000 டாலராகவே தொடர்ந்தாலும் அவரது போனஸ் தொகை 9 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
7. விப்ரோ சிஇஓ சுரேஷ் சேனாபதி
கடந்த நிதியாண்டில் ரூ.4.3 கோடி சம்பளம் வாங்கிய விப்ரோ சிஇஓ சுரேஷ் சேனாபதி மார்ச் மாத்தத்துடன் முடிந்த 2011-2012ம் நிதியாண்டில் வெறும் ரூ.1.8 கோடி தான் வாங்கியுள்ளார்.
8. என்ஐஐடியின் ஜாயிண்ட் எம்.டி., சிஇஓ அரவிந்த் தாகூர்
கடந்த மார்ச் மாதத்துடன் முடிந்த நிதியாண்டில் தாகூரின் சம்பளம் 3 சதவீதம் குறைக்கப்பட்டது. அவர் இந்த நிதியாண்டில் ரூ.2.91 கோடிச் சம்பளம் பெற்றுள்ளார்.
9. நியூக்லியஸ் சாப்ட்வேர் சிஇஓ, எம்.டி. விஷ்ணு துசாத்
டெல்லியைச் சேர்ந்த நியூக்லியஸ் சாப்ட்வேர் நிறுவனத்தின் சிஇஓ மற்றும் எம்.டி.யுமான விஷ்ணு துசாத்தின் சம்பளம் வெகுவாகக் குறைந்து ரூ.69.7 லட்சமாகியுள்ளது.
நன்றி :- ஒன் இந்தியா, 20-11-2012
0 comments:
Post a Comment
Kindly post a comment.