Tuesday, November 27, 2012

சீனாவில் 220 அடுக்கு மாடிகளுடன் உலகிலேயே மிக உயரமான கட்டிடம்




சீனாவில் 220 அடுக்கு மாடிகளுடன் உலகிலேயே மிக உயரமான கட்டிடம் கட்டப்படுகிறது. தற்போது உலகிலேயே மிக உயரமான புர்ஜ் கலீபா என்ற கட்டிடம் துபாயில் உள்ளது. இதன் உயரம் 828 மீட்டர் ஆகும். இந்தச் சாதனையை முறியடிக்கும் வகையில் சீனா சாங்ஷா நகரில் இதை விட மிக உயரமான கட்டிடத்தைக் கட்டுகிறது. இது 838 மீட்டர் உயரம் அதாவது 2,749 அடி உயரம் கொண்டதாக இருக்கும்.

220 அடுக்கு மாடிகளை கொண்ட இக்கட்டிடம் முழுவதும் ஏர்கண்டிசன் (குளு குளு வசதி) செய்யப்பட உள்ளது. துபாயில் உள்ள புர்ஜ் கலீபா கட்டிடத்தைக் கட்ட 5 ஆண்டுகள் ஆனது. ஆனால் இக்கட்டிடம் 90 நாட்களில் கட்டி முடிக்கப்பட உள்ளது.

அடுத்த ஆண்டு ஜனவரி தொடக்கத்தில் கட்டத் தொடங்கி மார்ச் மாதம் இறுதியில் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 5 அடுக்கு மாடிகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. புர்ஜ் கலீபா கட்டிடத்தை கட்டிய கட்டுமான நிறுவனமே இதை கட்டி தனது சாதனையை முறியடிக்கிறது.

இதில், அதே கட்டுமானக் கலைஞர்களும், என்ஜினீயர்களும் ஈடுபட உள்ளனர். ஏற்கனவே உலகில் உள்ள மிக உயரமான 20கட்டிடங்களில் 9 கட்டிடங்கள் சீனாவில் உள்ளன.                                                                                                          



நன்றி :- மாலைமலர், 25-11-2012

0 comments:

Post a Comment

Kindly post a comment.