Saturday, November 24, 2012

22 38 088 பேர் அணுகிய ஆன்மீகக்கடலில் திகைக்க வைக்கும் தகவல்கள் பல உள்ளன. உதாரணத்திற்கு ஒன்று மற்றவை, தங்கள் கரங்களில் !

அழிவுகளிலிருந்து பாதுகாக்கும் சுயம்பு புற்றுநாதர் வழிபாடு!(30.12.12 புளியங்குடி)

http://www.aanmigakkadal.com/
கடந்த ஏழு ஆண்டுகளாக வருடக்கிரகங்கள் என்று அழைக்கப்படும் குரு,சனி போன்றவை முறையாக பெயர்ச்சியாகவில்லை;இதனால்,மனிதகுல வரலாற்றில் பல அதிரடியான மாற்றங்கள் திடீரென ஏற்பட இருக்கின்றன.உலகெங்கும் பல நாடுகளில் ஆட்சிபீடத்தில் இதுவரை பெரும்பாலான ஆண்களே இருந்தனர்;வெகு விரைவில் பெண்கள் பெரும்பாலான பதவிகளுக்கு வர இருக்கின்றனர்.இதன்விளைவாக குடும்ப அமைப்பின் முக்கியத்துவத்தை உணரும் விதமாக பல நாடுகள் தமது நாட்டு அரசியலமைப்புச் சட்டத்தின்படி சீர்திருத்தங்களைக் கொண்டு வர இருக்கிறது.
புவியியல் ரீதியாக பூமியில் கடல்பரப்பு அதிகரித்து,நிலப்பரப்பு சுருங்க இருக்கிறது.இந்த மாற்றம் நமது இந்தியாவிலும்,தமிழ்நாட்டிலும் நிகழ இருக்கிறது.அடிக்கடி கோயிலின் கோபுரக் கலசங்கள் கீழே விழுவதன் உள்ளார்த்தம் இதுதான்.தமிழ்நாட்டிலும்,ஆந்திரமாநிலத்திலும் இந்த சம்பவங்கள் கடந்த ஓரிரு வருடங்களாக நிகழ்ந்து வருகின்றன.எனவே,உலக நன்மை வேண்டியும்,அழிவுகள் வராமல் இருக்கவும்,விலைவாசி குறையவும்,ஒவ்வொருவரின் வருமான அளவு அதிகரிக்கவும்,நம் ஒவ்வொருவரின் நீண்டகாலப் பிரச்னைகள் தீரவும் நமது ஆன்மீக குரு தலைமையில் ஒரு சிறப்பு வழிபாடு ஏற்பாடாகியிருக்கிறது.30.12.12 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு நெல்லை மாவட்டம் புளியங்குடிக்கு அனைவரும் வந்துவிட வேண்டும்.இங்கிருந்து 3 மலைகளை நடந்தே சென்று அருள்மிகு சுயம்பு புற்றுநாதர் திருக்கோவிலைச் சென்றடையப் போகிறோம்.இது ஒரு சிவாலயம் ஆகும்.இந்தக் கோவிலுக்கு  அடிக்கடி சித்தர்கள் சூட்சுமமாக வருகை தந்து வழிபட்டு வருகிறார்கள்.நாம் செல்லும் நாளிலும் நம்மில் சிலருக்கு சித்தர்களின் தரிசனம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.அப்பேர்ப்பட்ட சிறப்பான நாளில் நமது ஆன்மீக குரு அவர்கள் இந்த கூட்டு பிரார்த்தனையையும்,வழிபாட்டையும் ஏற்பாடு செய்திருக்கிறார்.கோவிலை ஒட்டி குளிக்கவும்,தங்கிடவும் வசதிகள் இயற்கையாகவே இருக்கின்றன.அன்று முழுவதும் கூட்டுப் பிரார்த்தனையும்,ஓம்சிவசிவஓம் கூட்டு ஜபமும் செய்ய இருக்கிறோம்.மறுநாள் 31.12.12 திங்கட்கிழமை காலை மலையிலிருந்து கீழே இறங்கி வரப் போகிறோம்.மலை மீது ஏறி கோவிலைச் சென்றடைய குறைந்தது 3 மணி நேரம் ஆகும்.
வரும்போது டார்ச் லைட்,பேனாக் கத்தி,மஞ்சள் துண்டு,ஸ்வெட்டர்,குடை,காலைக் கடமைகளுக்குரிய பொருட்கள் போன்றவைகளை ஒவ்வொருவரும் கொண்டு வர வேண்டும்.
மேலும் ஒவ்வொருவரும் 5 கிலோ நவதானியங்கள்(எல்லாம்கலந்தது),1 கிலோ டயமண்டு கல்கண்டு,சிவ அபிஷேகத்துக்குரிய பொருட்கள்,அரிசி மற்றும் காய்கறிகளைக்   கொண்டு வர வேண்டும்.


இந்த வழிபாட்டில் ஆண்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு;இதை வாசிக்கும் யார் வேண்டுமானாலும் இந்த கூட்டுவழிபாட்டில் கலந்து கொள்ளலாம்.வனத்துறையின் கட்டுப்பாட்டில் அருள்மிகு சுயம்பு புற்றுநாதர் திருக்கோவில் அமைந்திருப்பதால்,இந்த கூட்டு வழிபாட்டில் கலந்து கொள்ள விரும்புவோர் தங்கள் போட்டோ,பெயர்,செல் எண்,சொந்த ஊர்,தற்போது வாழும் ஊரைக் குறிப்பிட்டு முன்பதிவு செய்து கொள்ளவும்.முன்பதிவு செய்தவர்களின் போட்டோவைக் காட்டி வனத்துறையில் அனுமதி பெற வேண்டியிருக்கிறது.தொலை  தூரத்தில் இருப்பவர்கள்,முக்கிய அரசு மற்றும் தனியார் பணியிலிருப்பவர்கள் விடுப்பு எடுக்க வசதியாகவே இவ்வளவு முன்கூட்டியே இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.மிக மிக முக்கியமான ஆன்மீக நிகழ்ச்சியாக இது இருக்கப் போவதால் ஆன்மீகக்கடல் வாசகர்கள் அனைவரும் கலந்து கொள்ளும்படி வேண்டுகிறோம்.
தாங்கள் மின் அஞ்சலில் Subject ல்SUYAMBU TEMPLE VISIT FOR JOINT PRAY REG.  என்று குறிப்பிடவும்.


ஓம்சிவசிவஓம்

0 comments:

Post a Comment

Kindly post a comment.