Sunday, October 21, 2012

கனமழையால் காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு: தமிழக- கேரள எல்லையில் நிலச்சரிவு !


மேக்கரை: வடகிழக்குப் பருவமழை ஜோராகக் கொட்டி வரும் நிலையில் தமிழகம்- கேரள எல்லையில் வனப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு வருவதால் ராட்சதக் காட்டு மரங்கள் விழுந்து வருகின்றன.

தமிழக-கேரள பகுதியில் தென்மேற்குப் பருவமழை பொய்த்துப் போன நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களாக வலுப்பெற்று வருகிறது. இம்மழை கேரளாவிலும் வலுவடைந்துள்ளதால் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள அனைத்து நீர்தேக்கங்களும் வேகமாக நிரம்பி வருகின்றன.

கேரள மாநிலத்தின் நுழைவுப் பகுதியான ஆரியங்காவு பாலருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதுபோல் அச்சன்கோவில் பகுதியில் உள்ள கும்பா உருட்டி அருவி, மணலாறு, அச்சன்கோவில் ஆறு ஆகியவற்றில் வெள்ளப்பெருக்கு உருவாகியுள்ளது. காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வருவதால் வனப்பகுதியில் ஆங்காங்கே நிலச்சரிவு  ஏற்பட்டுள்ளது. இதனால் இராட்சத மரங்கள் காட்டுப் பகுதியில் விழுந்து வருகின்றன.

தமிழகத்தின் வழியாக அச்சன்கோவில் செல்லும் கேரளப் பயணிகள் கூறும்போது 92ம் ஆண்டு ஏற்பட்ட மழை சேதம் போல் தற்போது ஆகுமோ என அச்சம் தெரிவித்துள்ளனர்.

நன்றி :- ஒன் இந்தியா, 21-10-2012

0 comments:

Post a Comment

Kindly post a comment.