Sunday, October 21, 2012

வெள்ளப் பெருக்கால் குற்றால அருவிகளில் குளிக்கத் தடை !



குற்றாலம்: மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை கொட்டுவதால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கனமழையால் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள குண்டாறு, அடவி நயினார், கருப்பாநதி, கடனாநதி, இராமநதி உள்ளிட்ட அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. தென்காசி வட்டாரப் பகுதிகளில் அதிகபட்சமாக குண்டாறு நீர்த்தேக்க பகுதிகளில் 42 மிமீ மழை பதிவாகியுள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் கனமழையால் குற்றாலம், ஐந்தருவி, பழைய குற்றால அருவி, புலியருவி, சிற்றருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. குற்றாலம் மெயின் அருவியில் தொடர்ந்து இரண்டாவது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர்ப் பாதுகாப்பு வளைவை தாண்டிக் கொட்டுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றாலத்தில் குளிக்க ஆர்வமுடன் வந்த சுற்றுலாப் பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் அருவியை வேடிக்கை பார்த்துச் செல்கின்றனர். 

நன்றி :-ஒன் இந்தியா, 21-10-2012

0 comments:

Post a Comment

Kindly post a comment.