Monday, October 22, 2012

திருக்குறளுக்குக் குறள் வடிவில் உரை ! சரியான விமர்சனங்களும் நூலில் இடம் பெறும் !



ந.உ.துரை, தூத்துக்குடி.                  vce.projects@gmail.com 


                            059    அதிகாரம்  ஒற்றாடல் 


59-01.  ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்
           
            தெற்றேன்க மன்னவன் கண்    -திருவள்ளுவர்

      
            சிறப்புடைய  ஒற்றும் அறம்உரைக்கும் நூலும்
       
            அரசின் இரு கண்ணாய்க் கொள். ந.உ.துரை.


59-02.  எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்   

            வல்லறிதல் வேந்தன் தொழில். -திருவள்ளுவர்

            சுற்றம் நிகழ்வனைத்தும் எப்போதும் ஒற்றறிதல்
                                   
            மன்னன் கடமை யாகும்  -ந.உ.துரை.


59-03   ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னன்      

             கொற்றங் கொளக்கிடந்தது  இல்- திருவள்ளுவர்

             ஒற்றறிந்தும் தன்மையை ஆய்ந்துணரா மன்னவன்
       .                          
             வெற்றிக்கு வாய்ப்பேதும் இல்.   - ந.உ.துரை


59-04   வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு

            அனைவரையும் ஆராய்வது ஒற்று.   -திருவள்ளுவர்


             செயல்புரிவோர் தம்சுற்றம் தம்பகை மற்றும்
            
             அனைவரையும் ஆராய்வது ஒற்று. -ந.உ. துரை.


59-05    கடாஅ உருவொடு கண்னஞ்சாது யாண்டும்            

              உகாஅமை வல்லதே ஒற்று.  -திருக்குறள்

          
             ஐயமில்லாத தோற்றம் உருதியுடன் அஞ்சாமை
                                       
             வாய்த்திருப்ப(து) ஒற்றின் சிறப்பு -ந.உ.துரை.
         
     
உயர்நிலை  மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தமிழைப் படித்ததோடு சரி.

பின்னர் கற்றதெல்லாம் ஆங்கிலம் வழிக் கல்விப் பாதை. . தமிழ் நாவல்களில்

கதை, கட்டுரைகளில், கவிதைகளில் நாட்டம் உண்டு. ஆனால்

எழுதியதில்லலை   வலைத்தளத்தில் உலா வரும்பொழுது எழுதும் ஆசை

வந்தது. எழுதத் துவங்கினார்,                     


இவரால் எழுதப்பட்ட புதுக் கவிதைகள்  குளியலறைச் சுவர்களில் எழுதப்பட

வேண்டியவை  என  விமர்சனம் வந்தது. சவால் விட்டார். மரபுக்கவிதைகள்

இவர் கைவசமாயின. அதோடு இவரது மனம் அமைதியடையவில்லை.

புதுமையாகத் தமிழில்  ஏதாவது செய்ய  விரும்பினார். திருக்குறளுக்குக் 

திருக்குறள் வடிவிலேயே கருத்துரைப்பது எனத் தீர்மானித்தார்.  


பாத் ரூமில் எழுதப் படவேண்டியவை என விமர்சித்தவரின்

பாராட்டுக்களையும் பெற்று விட்டார்.   என்ன இருந்தாலும் நாம்

பாராட்ட வேண்டியது துரையை அல்ல. அவரிடம் இருந்த தமிழ் உணர்வைத்

தட்டி எழுப்பி விட்ட அந்த விமர்சகப் பெரியவரையே !                   


தமிழைப் பாமரரும் புரிந்து கொள்ளும் வண்ணம் படைப்புக்களை

உருவாக்கியதில், நெல்லை- தூத்துக்குடி படைப்பாளிகளுக்குத் தனிச்

சிறப்புண்டு. அவ்வரிசையில், ந.உ.துரையும் இடம் பெற்று விட்டார்.


புத்தகமாகிக் கொண்டிருக்கின்றது. விரைவில் வெளிவரும். வாய்ப்புள்ள

இடங்களில் எல்லாம் அறிமுக விழாவும் உண்டு. துரையும் பாராட்டப்

பெறுவார். மூத்த தமிழறிஞர் தமிழண்ணலே பாராட்டிவிட்டார். அவரது

உடல் நலக் குறைவால் அணிந்துரை பெறுவது தாமதமாகின்றது. எல்லாம்

விரைவில் நிகழும். 

 தூத்துக்குடியைச் சேர்ந்த ந.உ,துரை ஓர் பொறியாளர்;  அதாவது ,கட்டிடக்

கலை வல்லுநர் என்பதையும் இங்கு குறிப்பிடுவதும் அவசியமாகின்றது.

வலைப்பூஅன்பர்களுக்கு மட்டுமே அறிமுகமான இவரது படைப்பாற்றல், ஊர்,

உலகிற்கெல்லாம் தெரியப் போகின்றது.




கப்பலோட்டிய தமிழன், மண்ணின்  மணம் பரப்பும் நமது வலைபூ அன்பர் துரை

3 comments:

  1. வாழ்க ஐயா ...... நான் துரை . ந. உ ....

    குடத்துக்குள் விளக்காகவே இருந்துவிடுவேனோ? என்ற ஐயம் இன்று உங்களால் தீர்ந்தது எனக்கு . பெரும்பாலும் ஒரு படைபாளியை அவன் வாழும்பொழுது கண்டுகொள்ளாது ..அவன் இல்லாத பொழுது தலையில் தூக்கி வைத்து ஆடும் உலகம்இது .. இந்த வலைப்பூவின் மூலம் அந்தக் குறையைக் களைந்து , கலையை வளர்க்க முழுமூச்சில் இறங்கி இருக்கும் ஐயாவின் எண்ணம் மலையளவு வெற்றிபெற ...

    துளிர்க்கும் ஆவலில் இருக்கும் என்போன்ற
    தளிர்களின் சார்பில் நன்றிகளுடன் வாழ்த்துகிறேன்

    ReplyDelete
    Replies
    1. பதில் பதிவினைப் பார்த்து மகிழ்க ! அன்பு, ச.இராமசாமி

      Delete
  2. நல்லோர்களின் நல் எண்ணங்கள் காலங் கடந்தேனும் நிச்சயம் நிறைவேறும். தங்கள் நட்பைப் பெற்றிட உதவிய கணினித் தமிழ் செயல்பாட்டை என் மனத்தில் ”அழகி” மூலம் விதைத்த, நினைவில் வாழும் “பாஸிட்டிவ் அந்தோணி முத்துவுக்குத்தான் “ முதலில் நன்றி சொல்ல வேண்டும். வழிகாட்டித் துணைநிற்கும் வின்மணிக்கும் நன்றி சொல்வது அவசியமாகின்றது. கணினித் தமிழைப் பள்ளி, கல்லூரிகளுக்குப் பலன் கருதாது பரப்பி வரும் முனைவர் துரை மணிகண்டன், தமிழ் நண்பர்கள் குமரி வினோத், முத்துக்கமலம், தேனி, எம்.சுப்பிரமணியம், வல்லமை இணைய இதழ் நிறுவனர் அண்ணா கண்ணன், ஆசிரியர் பவள சங்கரி, எல்லாவற்றிற்கும் மேலாக, சமூக சேவையில் சிறந்தோரை ஆண்டு தோறும் தெரிந்தெடுத்து, ”மதுரா மாமனிதர்” பட்டமும், ஒருலட்சம் பொற்கிழியும் கொடுத்துவரும், வீ.கே.டி.பாலன் அவர்களின், “மகிழ்வித்து மகிழ்” என்ற தத்துவம் தரும் ஊக்குவிப்பும் தொடர்ந்து நல்லோர் நட்பு வட்டத்தை விரிவாக்கி வருகின்றது. நண்பர் துரை அவர்களே, நாகர்கோவில், மணிதணிகை குமாரின்”யாழி” நாவல் இரண்டாம் பதிப்பும், தங்கள் குறளுக்குக் குறள் வடிவில் பொருள் முதல் பதிப்பும், வின்மணியின் கணினித் தொழில் நுட்ப நூலும் ஜனவரி 2013-க்குள், குறிப்பாக ஜனவரி 26-ல் நடக்கப்போகும் மாபெரும் விழாவில், சென்னையில் ஓர் பொறியியல் கல்லூரியில் வெளியிடப்படும் முயற்சிகள் தொடர்கின்றன என்பதை மகிழ்ச்சியோடு அறிவிக்கின்றோம்.

    ReplyDelete

Kindly post a comment.