Monday, October 15, 2012

தங்குநடையின்றி மின்சாரம் பெற்றிட, ஆளுங்கட்சியினரின் ஆலோசனைக் கூட்டங்கள் நடக்கட்டும் ! மஞ்சக்குப்பம் வழிகாட்டுகிறது !



மின்வெட்டு மறைந்ததன் மர்மம் என்ன?


கடலூரில் தினந்தோறும் 16 மணி நேரத்துக்கும் மேலாக இருக்கும் மின்வெட்டு வழக்கத்துக்கு மாறாக சனிக்கிழமை செய்யப்படவில்லை.

கடலூர் மாவட்டத்தில் மின்சாரம் எப்போது வரும்? எப்போது போகும் எனத் தெரியாது. கடலூர் நகரில் பல மணி நேர தொடர் மின்வெட்டால் மக்கள் குடிநீர் இன்றி அவதி அடைந்து வருகின்றனர். இரவு நேர மின்வெட்டு மற்றும் கொசுத் தொல்லையால் தூக்கத்தை தொலைத்து வீதியில் அலையும் நிலை காணப்படுகிறது.

÷÷மிக கடுமையான மின்வெட்டு நிலவும் போதும் கூட ஆட்சியாளர்களோ, அதிகாரிகளோ எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் உள்ளது, பொது மக்களை எரிச்சலடைய செய்துள்ளது. மின்துறை அதிகாரிகளை கேட்டால் உயர் அதிகாரிகளின் உத்தரவு என ஒரே வரியில் முடித்து விடுகின்றனர். இத்தனை வேதனைகளை மக்கள் அனுபவித்து வந்த நிலையில், கடலூர் மஞ்சக்குப்பம் பகுதி மக்களுக்கு சனிக்கிழமை காலை முதல் இரவு 7 மணி வரையில் தடையில்லா மின்சாரம் கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்தனர்.

÷இந்நிலையில் கடலூர் நகரின் இதரப் பகுதியில் காலையில் செய்யப்பட்ட மின்வெட்டு மாலை வரை தொடர்ந்து நீடித்தது. இடையில் கொடுக்க வேண்டிய இரண்டு மணி நேரம் கூட சனிக்கிழமை கொடுக்கப்படவில்லை.

÷இதுகுறித்து விசாரித்ததில், அதிமுக சார்பில் கடலூர் நாடாளுமன்றத் தொகுதி செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடந்தது.

÷விழாவில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டுத் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், மின்வாரியத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி.முனுசாமி, வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் ஆகிய ஐந்து அமைச்சர்கள், அதிமுகவின் முன்னாள் மற்றும் இன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் உளளிட்டோர் கலந்து கொண்டனர்.

÷இதனால் இவர்கள் இருக்கும் வரையில் மின்வெட்டு செய்யக்கூடாது என மின்வாரியத்துக்கு உத்தரவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. விழா நடைபெறும் பகுதியில் காலையில் இருந்து இரவு 7 மணி வரையில் கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் மின் வெட்டு செய்யப்படவில்லை. அமைச்சர்கள் அனைவரும் புறப்பட்டு சென்ற பின்னர் மீண்டும் பழைய படி மின்வெட்டு நடைமுறைக்கு வந்தது.

÷விழாவுக்கு வந்த அமைச்சர்கள் இருக்கும் நேரம் மட்டும் தடையின்றி மின்சாரம் வழங்கியது பொதுமக்களிடையே ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி ;- தினமணி

0 comments:

Post a Comment

Kindly post a comment.