Wednesday, October 24, 2012

டாஸ்மாக்கில் இனி இ - பில்லிங்: இனியாவது 'கட்டிங்' கொள்ளை குறையுமா?



சென்னை: இனி அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் இ பில்லிங் முறையை அறிமுகப்படுத்தப் போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

விற்பனையாளர்கள் குடிமகன்களிடம் முறைகேடாக அதிக விலைக்கு மது விற்பதைத் தடுக்கவும், அனைத்து கடைகளின் விற்பனையையும் ஒரே நெட்வொர்க்கில் கொண்டு வரவும் இந்தப் புதிய முறையை அறிமுகப்படுத்துவதாக அரசு தெவித்துள்ளது.

தமிழகத்திலுள்ள 6823 டாஸ்மாக் கடைகளுக்கும் இந்த இ பில்லிங் முறையை கொண்டு வரப் போகிறார்களாம். இதற்காக ஜி பி ஆர் எஸ் தொழில் நுட்பத்துடன் ரூ 5 கோடிக்கு பில்லிங் எந்திரங்கள் வாங்கப்படுகின்றன.

இதுகுறித்துத் தெரிவித்த டாஸ்மாக் அதிகாரி ஒருவர், "டாஸ்மாக்கில் பணிபுரியும் ஊழியர்கள் ‘குடிமக்களிடம் தங்கள் மனம்போல ஒரு விலையை நிர்ணயித்து, அரசையும், மக்களையும் ஏமாற்றி வருகின்றனர். அவ்வாறு அவர்கள் அடிக்கும் ‘கட்டிங்'கை தடுக்கவும், விற்பனை நிலவரம், ரொக்க நிலவரம், ஸ்டாக் நிலவரம் போன்றவற்றை ஒருங்கிணைக்கவுமே இந்த அதிரடி வேலையில் அரசு இறங்கியதாக" தெரிவித்தார்.

எல்லாம் சரிதான்.. ஆனால் கடைக்கு சரக்கு வந்ததுமே, அதைப் பக்கத்திலுள்ள பார்களில் வைத்து ஊழியர்களே பிளாக்கில் விற்கிறார்களே... இதை எப்படித் தடுக்கப் போகிறது அரசு? இதற்கு எந்த வகையில் பில் போடுவார்கள்?      

நன்றி:-ஒன் இந்தியா, தமிழ், 24-10-2012.

0 comments:

Post a Comment

Kindly post a comment.