Tuesday, October 16, 2012

நாம் எல்லோருமே மனிதருள் ஒரு மாணிக்கம் தான் !



 தென்றல் வலைப்பூ அறிமுகம் !


உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

 மதுரையிலிருந்து ஜெயராஜன்






 நாலு பேர் நம்மைப் பாராட்டுகிற மாதிரி இருக்க வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் உண்டு.

உங்கள் சொத்து, நீங்கள் பழகுகிற விதம்தான். மிகையான மேக்கப்போ,பகட்டான ஆடைகளோ கை கொடுப்பதில்லை.                  

தாழ்வு மனப்பான்மையை விட்டு விடுங்கள்.யாருடனும் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள்.  

உங்களுடைய சிறப்பம்சங்களைக் கண்டு பிடியுங்கள்.உங்களுடைய குறைபாடுகளையும் தெரிந்து கொள்ளுங்கள்.


ஒரு புன்னகை பல காதங்களைக் கடக்கிறது.இது ஒரு அரிய சாதனம்.இது உதட்டில் பிறக்கிற சமாச்சாரம் அல்ல.மனதைத் திறக்கிற செயல்

.'நமக்கு எல்லாம் தெரியும்;\'என்ற நினைப்பில் செயல் படாதீர்கள்.யார் யாரிடம் எதைப் பேசுவது,எந்த அளவு பேசுவது என்று ஒரு  கணக்கு வைத்துக் கொள்ளுங்கள்.

மற்றவர்களுடைய குறையைக் கண்டு பிடிப்பதுதான் தலையாய வேலை என்பது போல நடந்து கொள்ளாதீர்கள்.அடுத்தவர் ரகசியத்தை அறிவதில் ஆர்வம் வேண்டாம்.ஊர் வம்பு பேசுகிறவர்களை அனுமதிக்காதீர்கள்.


சிலர் 'தான் சொல்வதுதான் சரி' என்பதை மற்றவர்களிடம் நிரூபித்து விட்டுத்தான் மறு வேலை பார்ப்பார்கள்.வாதிப்பதும்,முரண் படுவதும், மூர்க்கத்தனமாகப் பேசுவதும் சில நேரங்களில் வெற்றியைத் தரலாம். உண்மையில் இதனால் மற்றவர்களின் நல்லெண்ணத்தை மறைமுகமாக இழப்பீர்கள்.


சில நேரங்களில் விட்டுக் கொடுப்பது கூட வெற்றிதான்.காரியத்தின் பலனை இழந்தாலும்,எதிராளியை வெற்றி கொண்டு விடுகிறீர்களே!மன்னிக்க முடியாத தவறு என்று எதுவும் இல்லை.அதற்கு மனம்தான் விசாலமாக இருக்க வேண்டும்.மன்னிக்கத் தயங்காதீர்கள்.அது உங்களை மேலும் உயர்த்தும்.

யாரேனும் வேண்டியவர்கள்,காரணம் இல்லாமல் உங்களை எரிந்து விழலாம்.அவருடைய அப்போதைய மனநிலை அப்படி.நீங்களும் பதிலுக்கு உங்கள் கோபத்தைக் காட்டினால் வெறுப்பும்கசப்பும்தான் வளரும்.மௌனமே சிறந்த ஆயுதம்.பதில் சொல்லியே ஆக வேண்டும் எனில் இனிய வார்த்தைகளையே உபயோகியுங்கள்.                

இப்போது  நாம் ல்லோருமே                                                                       


http://jeyarajanm.blogspot.in/2012/10/blog-post_8.html





My blogs

    தென்றல்
    Gentle Breeze

Blogs I follow

    Life as Mom
    அன்பு செய்வோம்..!!
    யாழிசை ஓர் இலக்கிய பயணம்......
    வரலாற்று சுவடுகள்
    வேர்களைத்தேடி

About me
Location     மதுரை, தமிழ்நாடு, India


கனடாவிலிருந்து ஜெயபாரதன்,  அவர் பிறந்த ஊரிலிருந்து ஜெயராஜன் !

0 comments:

Post a Comment

Kindly post a comment.