Wednesday, October 24, 2012

”ஞானானந்தம்” -பெயர் அச்சேற விரும்பாத பெண்ணின் தத்துவத் தமிழ்க் கீர்த்தனைகள் !



சத்குரு ஸ்ரீ ஞானானந்தகிரி ஸ்வாமிகள் அருளிய சாதனைத் தத்துவம் !

முத்தடைகளை நீக்குவாயாக..
மும்மலமும் அகற்றுவாயாக..
இருவினையும் துடைப்பாயாக.சகித்தலும் பழகுவாயாக.
வெகுளியும் மயக்கமும் அணுகாதபடி காத்துக்கொள்வாயாக.
ஆசைப் பிசாசும் அண்டாது துரத்துவாயாக.
ஜீவர்களிடத்தில் கருணை கொள்வாயாக.
இற நம்பிக்கை வைப்பாயாக.
நல்லவர் இணக்கம் கொள்வாயாக.
கயவர் உறவு விடுப்பாயாக.
எவரிடத்தும் பணிவுடன் பழகுவாயாக.
இனியமொழி உரைப்பாயாக.
தானென்பது அகற்றுவாயாக.
தன்னிலைவிடாமல் பற்றுவாயாக.
சாந்தியுற்றுக் கலக்கமற்றுக் கடமை வழுவாமல் செலுத்துவாயாக.
பிற உயிர்க்கு உதவ விரும்புவாயாக.
பிறர் உதவியை விரும்பாதிருப்பாயாக.
ஐயுறவு அடக்குவாயாக.
மெய்யறிவு தீட்டுவாயாக.
அந்தர்முக நாட்டம் விடாமலும் பஹிர்முக நாட்டம் விரும்பாமலும் நாள் செலுத்துவாயாக.
மற்றவை யாவும் எல்லாம் வல்ல பரமன் திருவருள் வேண்டுவோமாக!

”ஐயமுடையவர்கள் ஞானந்தகிரி போதித்த தியான முறையை முயன்று பார்க்கட்டும் ! தம் சீடர்களின் மன நிலையை மாற்றி தியானத்திற்கு ஏற்றதாக அமைத்துத் தம்மை ஒரு நடுவராக நிறுத்திக் கொண்டு, அவர்களுக்கு ஆத்ம விசாரம் செய்வதில் உதவாமல், தெளிவான ஒரு பாதையில் அச்சாரத்தையே அடையச் செய்து விடுகின்றார்.

பக்தர்கள் உள்ளத்தில் அந்தர்மியாயாக விளங்கி அகமுகமாகவே உபதேசம் அருளி ஆத்ம விளிப்படையச் செய்கிறார். ஒரு பேரமைதி தோன்றி, விழிப்படந்து மாற்றம் நிகழ்வதையன்றி வேறொன்றும் உணரப்படுவதில்லை.”

பிரான்சு நாட்டைச் சேர்ந்த கிறிஸ்துவத் துறவியும், இந்தியாவில் பலவருடங்கள் தங்கி அபீஷீக்தானந்தர் என்ற பெயர்பெற்றவருமான ஹென்றி லா சா  ( Henry La Saus ) தமிழ் நாட்டில் ஒரு ”மகா புருஷர்” என்ற தமது புத்தகத்தில் ஸ்ரீ ஞானானந்தரைப்பற்றி இவ்வாறு எழுதியுள்ளார்.

திருக்கோயிலூர் தபோவனத்தின் சற்குரு ஸ்ரீ ஞானந்தகிரி ஸ்வாமிகளின் அருகில் இருந்து அவரைத் தரிசித்து, அவரது அருள் வாக்குகளைக் கேட்கும் தெவீகப் பேறு பெற்ற பக்தை, 1973-ஆம் ஆண்டு ஜுலை முதல், 1975- ஆம் அக்டோபர் வரையில் எழுதப்பட்டதமிழ்க் கீர்த்தனைகளின் தொகுப்பே ”ஞானாந்தம்” என்ற நூலாகும். பண்புடைய குடும்பத்தச் சேர்ந்த அந்த இல்லத்தரசி, தம் பெயர் வெளியிடப்படுவதை விரும்பவில்லை.

அவர் இயற்றிய பாடல்கள் கர்நாடக இசை ராகங்களில் பாடக் கூடியவை. சில பிரபலமான கிராமீயப் பாடல்களின் மெட்டிலும் அமைந்துள்ளன. ஸ்வாமிகள் சமாதி அடைவதற்கு சில ஆண்டுகளுக்கு முன் அவரைத் தரிசித்த இப்பெண்மணி இப்பாடல்களை எழுதியுள்ளார். எல்லாத் ட்ய்ஹெவங்களையும் குரு வடிவில் கண்ட இவர், குருவையே தன் பக்திப் பாடல்களுக்குக் கருத்தாக அமைத்துள்ளார்.

தன் முகம் / பெயர் காட்ட விரும்பாத அந்தப் பெண்மணியின் விருப்பம் நிறைவேற்றப் பட்டுள்ளது. அவர் இயற்றிய மொத்தக் கீர்த்தனைகள் 155. அவற்றுள் 135-வது பாடலில் வரும் ”ஞானானந்தம்”  என்ற வார்த்தையே இந்த நூலுக்குத் தலைப்பாக அமைந்தது. ஸ்வாமிகளின் ஆராதனை தினமாகிய 08-12-1975-அன்று இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது.

22-10-2012-ல். மதுரா டிராவல்ஸ் உரிமையாளர், நான்காவது மதுரா மாமனிதர் ஆண்டுவிழாவினை, சென்னைப் பத்திரிக்கையாளர் மன்றத்தில் நிகழ்த்தினார். நான்காவது , மதுரா மாமனிதர் பட்டமும், ஒரு லட்சம் ரொக்கத்துடன் கூடிய பொற்கிழி விருதும் , மதுரையைச் சேர்ந்த, பேராசிரியர், எஸ்.டி. நோவா அவர்களுக்கு, நெல்லை மாவட்டம், தென்காசியை அடுத்த ஆய்க்குடியில் உள்ள அமர் சேவாசங்கத் தலைவர், எஸ்.இராமகிருஷ்ணன் முன்னிலையில் வழங்கப்பெற்றது. விழாவில் பங்குபெற்றபின்,

 திருவல்லிக்கேணி ஹோட்டல் சங்கீதா அருகில் உள்ள நடைபாதைக் கடைகளில், வாங்கப்பட்ட சில புத்தகங்களில் இந்தப் பொக்கிஷமும் கிடைத்தது. உடன் வந்தவர் சிவகாசி தியாகி வ.உ.சி. முரசு ஆசிரியர், எஸ். சுப்பிரமணியன்.

 ஏற்கனவே, தபோவனத்துடன்  தொடர்பு இருந்த காரணத்தால் ஏற்பட்ட மகிழ்ச்சி இரட்டிப்பாயிற்ற்று. தற்போதைய ஸ்வாமிகளின் தனி உதவியாளர் சிவகுமாருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டோம். அவர் பெங்களூருவில் இருந்தார். தபோவனம் திரும்பியவுடன் இந்நூல் மீள் பிரசுரம் ஆவது நிச்சயம்.

புத்தகத்திற்குப் பெயர் சூட்டக் காரணமாக இருந்த 135 -வது பாடல்.-------”ஞானானந்தம்”

                                  பல்லவி.

என்றும் என் நெஞ்சத்தின் உட்குரலாய்
எழுந்திடும் நாதம் ஞானானந்தம்              ( என்றும் )

                            அனுபல்லவி.

1.  உள்ளும் புறமும் எங்கும் பரந்து
   ஒலித்திடும் நாதம் ஞானந்தம்              (என்றும் )
2.  உண்ணும் உணவும் பருகிடும் நீரும்
   என் உணர்வனைத்தும் ஞானாந்தம்        ( என்றும் )
3.  என் உடல் யாவையும் ஊடுறுவி
   நிறைவாய் நின்றது ஞானாந்தம்           ( என்றும் ) 

                                சரணம்

1.  ஞானானந்தம் என்னும் சொல்லன்றி
   வேரெதும் பேசேன் என் வாணாளில்     ( என்றும் )
2.  ஞானானந்தம் தந்திடும் இன்பம்
   தாகம் அகலப் பருகிடுவேனே           ( என்றும் )
3.  ஞானந்தமே என்னை ஆளும்
   நற்குருநாதன் என்றுணர்ந்தேனே      ( என்றும் )                                             


தபோவனம் வெளியிட்டுள்ள செங்கோட்டை அக்காவின் கதையும் இத்தன்மையதே. ஆனால் , அந்த நூலினைவிட, ஞானானந்தம் படித்துப்
புரிந்துகொள்ள எளிமையாய் உள்ளது.                                  

தென்பெண்ணை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது, தபோவனம். திருக்கோவிலூர், திருவண்ணாமலை அருகில் அமைந்துள்ளன.

இதர விபரங்களுக்கும், தொடர்பிற்கும்,http://www.gnanananda.org/

2 comments:

  1. அருமையாக் உள்ளது. தாங்கள் யார் என்பதை தெரிந்துகொள்ளலாமா ? அன்புடன்,
    என்.ஆர். ரங்கனாதன். 9380288980

    ReplyDelete
  2. ஞானானந்தா ஞானானந்தா ஸத்குரு நாதா ஞானானந்தா!!
    ஞானானந்தா ஞானானந்தா ஸத்குரு நாதா ஞானானந்தா!!
    ஞானானந்தா ஞானானந்தா ஸத்குரு நாதா ஞானானந்தா!!
    ஞானானந்தா ஞானானந்தா ஸத்குரு நாதா ஞானானந்தா!!
    ஞானானந்தா ஞானானந்தா ஸத்குரு நாதா ஞானானந்தா!!
    ஞானானந்தா ஞானானந்தா ஸத்குரு நாதா ஞானானந்தா!!ஞானானந்தா ஞானானந்தா ஸத்குரு நாதா ஞானானந்தா!!ஞானானந்தா ஞானானந்தா ஸத்குரு நாதா ஞானானந்தா!!ஞானானந்தா ஞானானந்தா ஸத்குரு நாதா ஞானானந்தா!!ஞானானந்தா ஞானானந்தா ஸத்குரு நாதா ஞானானந்தா!!ஞானானந்தா ஞானானந்தா ஸத்குரு நாதா ஞானானந்தா!!ஞானானந்தா ஞானானந்தா ஸத்குரு நாதா ஞானானந்தா!!ஞானானந்தா ஞானானந்தா ஸத்குரு நாதா ஞானானந்தா!!ஞானானந்தா ஞானானந்தா ஸத்குரு நாதா ஞானானந்தா!!ஞானானந்தா ஞானானந்தா ஸத்குரு நாதா
    ஞானானந்தா ஞானானந்தா ஸத்குரு நாதா ஞானானந்தா!!
    ஞானானந்தா ஞானானந்தா ஸத்குரு நாதா ஞானானந்தா!!
    ஞானானந்தா ஞானானந்தா ஸத்குரு நாதா ஞானானந்தா!!

    ReplyDelete

Kindly post a comment.