Friday, October 26, 2012

தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை தேர்வு !





தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத்தேர்வு (NMMS) திட்டத்தின் கீழ் படிப்புதவித்தொகை வழங்க மாணவர்களைத் தேர்ந்தெடுக்க டிசம்பர் 30ம் தேதியன்று அனைத்துக் கல்வி மாவட்டத் தலைநகரங்களிலும் தேர்வு நடைபெறவுள்ளது.

கல்வித்தகுதி:

மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் (அரசு, மாநகராட்சி, நகராட்சி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில்) 2012-13 கல்வியாண்டில் 8ம் வகுப்பு பயிலும் மாணவ/மாணவியர் அவர்தம் பெற்றோர் குடும்ப வருமானம் ஆண்டொன்றுக்கு  இரண்டரை லட்சம் மிகமால் இருந்தால் மட்டுமே இத்தேர்வு எழுத தகுதியுடையவர்கள்.

2011-12ம் கல்வியாண்டில் 7ம் வகுப்பு பயின்று முழு ஆண்டுத் தேர்வில் எஸ்சி, எஸ்டி மாணவ/மாணவிகள் 50 சதவீத மதிப்பெண்களும், பிற மாணவர்கள் 55 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

NMMS -தேர்விற்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் விண்ணப்பங்களை, நவ.,01ம் தேதி முதல் நவ.,09ம் தேதி வரை  www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில், பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும் விவரங்கள் அறிய www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

நன்றி :- தினமணி, 26-10-2012





0 comments:

Post a Comment

Kindly post a comment.