Thursday, October 25, 2012

மிகப் பெரும் நிலநடுக்கத்தை எதிர்கொள்ளப் போகிறதாம் இலங்கை!





கொழும்பு: இலங்கையில் மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்படக் கூடும் என்றும் இது பேரழிவை ஏற்படுத்தும் என்றும் இலங்கையின் பேரிடர் மேலாண்மைக் குழு வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

கொழும்பில் இலங்கையின் பேரிடர் கால நடவடிக்கைகளுக்காக குழுவின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், இலங்கையின் தென்மேற்குக் கரை புவித் தட்டில் பிளவு ஏற்பட்டிருப்பட்டதாக நிலநடுக்கத் தடுப்பு நடவடிக்கைக் குழுவின் தலைவர் சகபந்து கூறியுள்ளார்.

குறிப்பாக இந்தோனேசியா- ஆஸ்திரேலியா புவிதட்டில் இப்பிளவு ஏற்பட்டிருக்கிறது. இதனால் இலங்கையில் மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பிருகிறது என்றார் அவர்.

 கடந்த 1615ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட மிகப் பெரிய நிலநடுக்கம் மிகப் பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தியிருந்தது. அதைப் போன்ற ஒரு நிலநடுக்கம் வரக்கூடும் என்கின்றனர் புவியியல்  வல்லுநர்கள்!                                 

நன்றி :- ஒன் இந்தியா, 25-10-2012

0 comments:

Post a Comment

Kindly post a comment.