Saturday, October 20, 2012

சென்னை டி.வி. நுகர்வோர் குறை தீர்ப்பு ! செட்-டாப்பாக்ஸ் வருகை! அரசு கேபிள் கட்டுப்பாட்டு அறையைத் திறக்கின்றார், தமிழக முதல்வர் !





சென்னையில் அரசு கேபிள் டி.வி. சேவையைத் தொடங்குவதன் முதல் கட்டமாக, அதன் கட்டுப்பாட்டு அறை திறக்கப்படுகிறது. இதை தலைமைச் செயலகத்தில் இருந்து விடியோ கான்ஃபரன்சிங் முறை மூலம் முதல்வர் ஜெயலலிதா சனிக்கிழமை திறந்து வைக்கிறார்.

தமிழகத்தில் சென்னையைத் தவிர்த்துப் பிற மாவட்டங்களில் அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் மூலமாக, கேபிள் டி.வி. சேனல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மிகக் குறைந்த கட்டணத்தில் நுகர்வோர்களுக்கு இந்தச் சேவை அளிக்கப்படுகிறது. சென்னையிலும் அரசு கேபிள் டி.வி. சேவையைத் தொடங்குவதற்கான பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, சென்னை நகரில் உள்ள கேபிள் டி.வி. சந்தாதாரர்களுக்கு செட் டாப் பாக்ஸ் வழங்க வேண்டும்.

முன்பணம் செலுத்தும் வசதி: தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தில் பதிவு செய்துள்ள சென்னை கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் தங்கள் சந்தாதாரர்களுக்குத் தேவைப்படும் செட் டாப் பாக்ஸூகளுக்கு முன்பணமாக, ஒரு பாக்ஸூக்கு ரூ.500 செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது. முன்பணம் செலுத்துவதற்கான கடைசி தேதி அக்டோபர் 25 என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், செட் டாப் பாக்ஸ் வழங்கும் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டதும் சென்னையில் அரசு கேபிள் டி.வி. சேவை முழு வீச்சில் தொடங்கும் என அரசுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கட்டுப்பாட்டு அறை தொடக்கம்: அரசு கேபிள் டி.வி. சேவையை சென்னையில் தொடங்குவதன் முன்னோட்டமாக, அதற்கான கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் அலுவலகத்தில் இந்தக் கட்டுப்பாடு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த அறையை முதல்வர் ஜெயலலிதா சனிக்கிழமை திறந்து வைக்கிறார்.

கட்டுப்பாட்டு அறை திறக்கப்படுவதன் மூலம், சென்னையில் அரசு கேபிள் டி.வி. சேவையை முழுவீச்சில் தொடங்குவதற்கான பணிகள் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

நன்றி :- தினமணி, 20-10-2012.

0 comments:

Post a Comment

Kindly post a comment.